புதுடெல்லி,
ஜப்பான் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி அங்குள்ள யோகோஹமாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 117-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா, தரவரிசையில் 53-வது இடத்தில் உள்ள ஹயா அலியை (எகிப்து) சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோஸ்னா 11-5, 11-9, 6-11, 11-8 என்ற செட் கணக்கில் ஹயா அலியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 38 நிமிடமே தேவைப்பட்டது. சென்னையை சேர்ந்த 39 வயதான ஜோஸ்னா கைப்பற்றிய 11-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.
Related Tags :