புதுடெல்லி,
தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே தீபாவளி களைகட்டி வருகிறது. பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து நீராடிவிட்டு பூஜைகள் செய்து, புத்தாடை அணிந்து குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். கோவில்களுக்கு சென்றும் பலர் வழிபாடு செய்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்த பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டார்.