சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தரிசனம்

குமுளி: மாதாந்​திர பூஜைக்​காக சபரிமலை ஐயப்​பன் கோயி​ல் நடை கடந்த 17-ம் தேதி மாலை திறக்​கப்​பட்​டது. மறு​நாள் முதல் கணபதி பூஜை, நெய் அபிஷேகம் உள்​ளிட்ட பல்​வேறு தொடர் வழி​பாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. குடியரசு தலை​வர் திர​வுபதி முர்மு இன்று சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் தரிசனம் செய்ய உள்​ளார்.

இதற்​காக நேற்று பிற்​பகலில் இருந்தே பக்​தர்​களின் வருகை கட்​டுப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. கனமழை தொடர்ந்​த​தால் குறை​வான பக்​தர்​களே நேற்று சுவாமி தரிசனத்​துக்கு வந்​திருந்​தனர். இதனால் பம்​பை, அப்​பாச்​சிமேடு, நடைப்பந்​தல் உள்​ளிட்ட பகு​தி​கள் வெறிச்​சோடிச் காணப்​பட்​டன.

குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று மாலை திரு​வனந்​த​புரம் வந்​தார். இன்று காலை ஹெலி​காப்​டர் மூலம் நிலக்​கல் வந்​து, அங்​கிருந்து கார் மூலம் பம்பை வரு​கிறார்.

அங்கு நதி​யில் நீராடி, கணபதி கோயி​லில் இரு​முடி கட்டி ஜீப் மூலம் சபரிமலை செல்ல உள்​ளார். பிற்​பகல் ஒரு மணி​யள​வில் அவர் ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்ய உள்​ள​தாக திரு​வி​தாங்​கூர் தேவசம் போர்டு அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதற்​காக நேற்று ஜீப்​களை இயக்கி முன்​னோட்​டம் பார்க்​கப்​பட்​டது.

மேலும், பம்​பை, நிலக்​கல், சபரிமலை உள்​ளிட்ட பகு​தி​களில் பாது​காப்பு ஏற்​பாடு​கள் அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளன. தொடர்ந்து இன்று இரவு கோயில் நடை சாத்​தப்பட உள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.