ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மற்றும் சிட்னி மைதானங்களில் நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் இளம் பவுலர் ஹர்சித் ராணா சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுக்களை பெற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா இந்த இளம் வீரரை பெருமையுடன் பாராட்டி, அவரின் பவுலிங் திறனை வாழ்த்தினார்.
Add Zee News as a Preferred Source
ஆஸ்திரேலியாவில் அளவுகோல் இல்லாமல் உள்ள சூழலில் இளம் வீரர் முன்னேறியதில் ரோகித் சர்மா பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார். “இந்த ஒருநாள் தொடரை வெல்ல முடியாதது ஏமாற்றம் தான். ஆனால் இளம் வீரர்கள் வாய்ப்பு கிடைத்தது முக்கியம். இதில் ஹர்சித் ராணாவின் பங்கேற்போடு இந்தியா வலுவடைந்தது” என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றது. மூத்த வீரர்களான ரோகித் சர்மா 121 ரன் மற்றும் விராட் கோலி 74 ரன் பேட்டிங் நிலையை உறுதி செய்தனர். பந்து வீச்சில் இளம் வீரர் ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளை விழ்த்தி அசத்தினார்.
விமர்சனங்களுக்கு பதிலடி
முன்னதாக சில சமூக வலைத்தளங்களில் ஹர்சித் ராணாவுக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்திருந்தன். இந்த சூழலில், அழுத்தங்களுக்கு மத்தியில் 3 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தன் மேல் உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போது அவரை பலரும் பாராட்டி வருகின்றனர். இருப்பினும் அவரை தொடர்ந்து சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.
முன்னாள் வீரர்களின் விமர்சனத்திலும் மாற்றம்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் அணியில் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டபோது, முன்னாள் வீரர் அஸ்வின் மற்றும் ஸ்ரீகாந்த் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தனர். இருப்பினும் தற்போது இவர்களும் ஹர்சித் ராணாவின் திறனை பாராட்டி வருகிறார். இது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
About the Author
R Balaji