ரியோ டி ஜெனீரோ,
அவருடைய அரசு போதை பொருள் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் இணைந்து அந்நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போதை பொருள் கும்பலுக்கு எதிராக ஹெலிகாப்டர்கள் மற்றும் கவச வாகனங்கள் கொண்டு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது, போதை பொருள் கும்பலுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதனால், அந்த பகுதியே புகை மண்டலம் போல் காட்சியளித்தது.
இதில், போதை பொருள் கும்பலை சேர்ந்த சந்தேகத்திற்குரிய நபர்கள் 60 பேர் மற்றும் 4 போலீசார் உள்பட 64 பேர் பலியானார்கள் என முதல் கட்ட தகவல் தெரிவித்தது. ரியோ நகர வரலாற்றில் மிக பெரிய நடவடிக்கையிது என இதுபற்றி ரியோ நகர கவர்னர் கிளாடியோ கேஸ்டிரோ குறிப்பிட்டார்.
இதில், 93 துப்பாக்கிகள் மற்றும் 500 கிலோவுக்கும் கூடுதலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோதலில் பலர் காயமடைந்து உள்ளனர். போதை பொருள் பயங்கரவாதம் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கை தேவையான ஒன்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், உடல்கள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், பலி எண்ணிக்கை 132 ஆக உயர்ந்து உள்ளது. பிரேசில் வரலாற்றில், போலீசாரின் இந்த நடவடிக்கை அதிக வன்முறையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால், இதுபற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நடவடிக்கை, கடந்த 2 மாதங்களாக திட்டமிடப்பட்டு இருந்தது. இரவோடு இரவாக 60 முதல் 70 உடல்களை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சுமந்து வந்து போட்டு சென்றனர்.
உறவினர்கள் உடல்களை அடையாளம் காண்பதற்காக அவற்றை போர்வைகள் கொண்டு போர்த்தியும், உள்ளாடைகளுடனும் வைக்கப்பட்டு இருந்தன. எனினும், தொடர்ந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வந்தன. பெண்களும், மனைவிகளும், குழந்தைகளும் இரவு முழுவதும் அழுது கொண்டே இருந்தனர்.
இதில் கும்பலின் முக்கிய தலைவன் இன்னும் பிடிபடவில்லை. குடும்பங்களை அழிக்க கூடிய போதை பொருள் பரவல் மற்றும் வன்முறைகளை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க முடியாது என்று பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா கூறினார். கும்பலை சேர்ந்த 113 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 118 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என சமீபத்திய தகவல் தெரிவிக்கின்றது. 2021-ம் ஆண்டில் போலீசாரின் அதிரடி நடவடிக்கையில் 28 பேர் கொல்லப்பட்டனர். அதனை விட பிரேசில் வரலாற்றிலேயே மிக பெரிய நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
