Jemimah Rodrigues Biography, Net Worth: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடர் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தற்போது கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நேற்று நடந்த பரபரப்பான 2வது அரையிறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
Add Zee News as a Preferred Source
INDW vs AUSW Semi Final: வெற்றிகரமான சேஸிங்
ஆஸ்திரேலியா நிர்ணயித்த மெகா இலக்கான 339 ரன்களை, இந்திய அணி 9 பந்துகள் மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியிருக்கிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் ஓடிஐ கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி நாக்அவுட் போட்டியில் மிகப்பெரிய வெற்றிகரமான சேஸிங் ஆகும். மகளிர் ஓடிஐ கிரிக்கெட்டில் அதிகபட்ச சேஸிங்கும் இதுதான்.
One step closer to history
India pull off a chase for the ages and storm into the #CWC25 Final#INDvAUS pic.twitter.com/rMgZUIyFC3
— ICC (@ICC) October 30, 2025
இதன்மூலம், 2017ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய மகளிர் அணி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு தற்போது தகுதிபெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்திதான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆனால், இறுதிப்போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. தற்போது இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரும் நவ. 2 (ஞாயிறு) அன்று டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.
Jemimah Rodrigues: 97 ஓவர்கள் களத்தில் நின்ற ஜெமிமா
நடப்பு தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 331 ரன்களை சேஸிங் செய்து இந்தியாவை வீழ்த்தியிருந்தது. தற்போது அதற்கு தக்க பதிலடியாக 7 முறை சாம்பியன் அணியான ஆஸ்திரேலியாவை இந்தியா நாக்அவுட் செய்திருக்கிறது. இன்னும் கோப்பையை வெல்லாவிட்டாலும் கூட இந்திய ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதற்கு முழு முதற்காரணம், இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ். நேற்று பேட்டிங்கில் 1.3 ஓவரிலேயே களத்திற்கு வந்துவிட்ட ஜெமிமா கடைசிவரை நின்று ஆட்டத்தை இந்தியாவின் வசம் கொண்டுவந்தார்.
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
ஜெமிமா நேற்றைய போட்டியில் பீல்டிங்கை சேர்த்து சுமார் 97 ஓவர்கள் களத்தில் நின்றுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஜெமிமா நேற்று 134 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 127 ரன்களை அடித்து மிரட்டினார். இந்த தன்னிகரற்ற இன்னிங்ஸை இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் ஒருபோதும் மறக்காது. அந்தளவிற்கு பவர்ஃபுல்லான இன்னிங்ஸை ஜெமிமா விளையாடியிருக்கிறார். அந்த வகையில், தற்போது ஜெமிமா ரோட்ரிக்ஸ் யார் என பலரும் இணையத்தில் தேடி வரும் நிலையில், அவர் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
Jemimah Rodrigues: யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்?
25 வயதான ஜெமிமா ரோட்ரிக்ஸ் மும்பையைச் சேர்ந்தவர். ஜெமிமாவின் தந்தையும் கிரிக்கெட் பயிற்சியாளர் என்பதால், ஜெமிமா தனது சிறுவயதில் இருந்த கிரிக்கெட் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். மும்பையில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளியிலும், ரிஸ்வி கலை, அறிவியல் மற்றும் வர்த்தக கல்லூரியில் உயர்கல்வியையும் கற்றுள்ளார். பள்ளிப் பருவத்தில் இவர் ஜூனியர் அளவிலான ஹாக்கி போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
Jemimah Rodrigues: 17 வயதில் இரட்டை சதம்
2012-13 காலகட்டத்தில் ஜெமிமா தனது 12 வயதில், மகாராஷ்டிரா அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான தொடரில் விளையாடினார். 2017ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் போட்டி ஒன்றில் இவர் அடித்த இரட்டை சதம்தான் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. உள்நாட்டு மகளிர் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த 2வது வீராங்கனை ஜெமிமா ஆவார். வலது பேட்டர் மற்றும் பார்ட் டைம் ஆஃப் ஸ்பின்னரான ஜெமிமா அவரது 18வது வயதில், அதாவது 2018ஆம் ஆண்டில் இந்திய சீனியர் மகளிர் அணியில் இடம்பிடித்தார். அப்போது முதல் இந்திய அணியின் நம்பிக்கையளிக்கும் மிடில் ஆர்டர் பேட்டராக வலம் வருகிறார்.
ஜெமிமா பொதுவெளியில் சுட்டிப் பெண்ணாக அறியப்படுபவர். இவரின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவை. பொதுவெளியில் இவரது நகைச்சுவை பெரிதும் ரசிக்கப்படும் ஒன்றாகும். இசையிலும், கடவுள் பக்தியிலும் இவர் நாட்டம் கொண்டவர். களத்திலும் துடிப்போடு, கொண்டாட்டத்தோடு காணப்படும் இவரின் செயல்பாடுகளை ரசிகர்கள் பெரிதும் ரசிப்பார்கள் எனலாம். WPL தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 2023 WPL ஏலத்தில் இவரை டெல்லி அணி ரூ.2.20 கோடிக்கு எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவின் WBBL தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
Jemimah Rodrigues: ஜெமிமா சொத்து மதிப்பு
பிசிசிஐயின் மத்திய ஒப்பந்த பட்டியலில், ஜெமிமா கிரேட் B-ல் உள்ளார். இதன்மூலம் ஓராண்டுக்கு ரூ.30 லட்சம் ஊதியம் வழங்கப்படும். ஒரு டெஸ்ட் போட்டிக்கு ரூ.15 லட்சம், ஒரு ஓடிஐ போட்டிக்கு ரூ.6 லட்சம், ஒரு டி20ஐ போட்டிக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். தொடர்ந்து உள்நாட்டு, சர்வதேச போட்டிகளில் இருந்து வரும் வருமானம், WPL மற்றும் WBBL போன்ற லீக் கிரிக்கெட் மூலம் வரும் வருமானம், மற்ற விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை சேர்த்தால் இவரது சொத்து மதிப்பு ரூ.8 கோடி முதல் ரூ.15 கோடி வரை இருக்கும் என கணக்கிடப்படுகிறது. இருப்பினும், இது உறுதிசெய்யப்படவில்லை.
About the Author
                  
                  Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More
