சென்னையில் மீண்டும் அமைகிறது ஃபோர்டு வாகன இன்ஜின் உற்பத்தி ஆலை: முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம்

சென்னை: சென்னையை அடுத்த மறைமலை நகரில் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், வாகன இன்​ஜின் உற்​பத்தி ஆலையை அமைப் பதற்காக ஃபோர்டு நிறு​வனத்​துடன் புரிந்​துணர்வு ஒப்​பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலை யில் நேற்று கையெழுத்தானது.

இதுகுறித்து அரசு நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: நாட்​டிலேயே 2-வது பெரிய பொருளா​தா​ர​மாக​வும், பல்வேறு துறை​களில் உற்​பத்தி மற்​றும் ஏற்​றும​தி​யில் முன்​னணி மாநில​மாக​வும் தமிழகம் விளங்கி வரு​கிறது. தொழில் முதலீடு​களை ஈர்ப்​ப​தி​லும், அதிக எண்​ணிக்​கையி​லான லை​வாய்ப்​பு​களை, குறிப்​பாக பெண்​களுக்​கான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வ​தி​லும் அரசு சிறப்​பாக செயல்​படு​வ​தாக, 2024-25-ம் ஆண்​டுக்​கான பொருளா​தார ஆய்​வறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழக இளைஞர்​களுக்கு அதிக எண்​ணிக்​கையி​லான வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​க​வும், 2030-ம் ஆண்​டுக்​குள் தமிழக பொருளா​தா​ரம் 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வளர்ச்சி பெற​வும், தேவையான முன்​னெடுப்​பு​ எடுக்கப்பட்டு​ வரு​கிறது. அந்த வகை​யில், கடந்த 2024-ல் அமெரிக்கா​வுக்கு அரசு​முறைப் பயணம் மேற்​கொண்ட முதல்​வர் ஸ்​டா​லின், ஃபோர்டு நிறு​வனத்​தின் உயர் அதி​காரி​களைச் சந்​தித்​துப் பேசினார்.அப்​போது அவர்​கள் உறு​தி​யளித்​த​படி, ஃபோர்டு நிறு​வனம் ரூ.3,250 கோடி முதலீட்​டில் 600 பேருக்கு வேலை​வாய்ப்பு அளிக்​கும் வகை​யில், அடுத்த தலை​முறை வாகன இன்​ஜின் (Next-Gen Engine) உற்​பத்தி திட்​டத்தை மீண்​டும் தொடங்க உள்ளது. அதற்​கான புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் முதல்​வர் முன்​னிலை​யில் நேற்று கையெழுத்தானது.

இந்த நிகழ்ச்​சி​யில், துணைமுதல்​வர் உதயநிதி, அமைச்​சர்டிஆர்​பி.ராஜா, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், துறை செயலர் வி.அருண்​ராய், தமிழ்​நாடு வழி​காட்டி நிறு​வனத்​தின் மேலாண்மை இயக்​குநர் தாரேஸ் அகமது, ஃபோர்டு நிறு​வனத்​தின் உலகளா​விய இயக்​குநர் மார்ட்​டின் எவரிட், துணைத்தலை​வர் மாத்யூ கோடிலூஸ்​கிஉள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​. இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட வலைத்தளப் பதிவில்,‘முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது ஃபோர்டு நிறுவனம். மிக நீண்ட, நம்பிக்கைகொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ஆட்டோமொபைல் உதிரிபாகச் சூழலும் வலுவடையும். அடுத்த தலைமுறை இஞ்ஜின் களை உற்பத்தி செய்ய இந்தியாவின் ஆட்டோ மொபைல் தலைநகரத்தைத் தேர்வு செய்துள்ள ஃபோர்டின் முடிவானது, தமிழக தொழில்துறை வலிமைக்கும் உலக உற்பத்திச் சங்கிலியில் தவிர்க்க முடியாத இடத்துக்கும் மற்றுமொரு சான்றாக உள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.