இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. இதுவரையில் 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் முடிவடைந்திருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ளன. ஏற்கனவே ஒருநாள் தொடரை இழந்த நிலையில், டி20 தொடரை வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
Add Zee News as a Preferred Source
இத்தொடரின் முதல் போட்டி ரத்தானதை அடுத்து இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும் வென்றது. இதன் காரணமாக தற்போது இரு அணிகளும் 1க்கு 1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 4வது போட்டி நவம்பர் 06ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பும்ரா விளையாடுவாரா?
இந்த நான்காவது போட்டியில் வெற்றி பெறும் முன்னிலை பெறும் என்பதால் இரு அணிகளுக்குமே இப்போட்டி முக்கிய போட்டியாக மாறி உள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், இப்போட்டியில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா என்ற கேள்வியும் ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பி உள்ளன.
அதாவது, ஜஸ்பிரித் பும்ராவுக்கு சமீப காலமாக அதிக காயம் ஏற்படுவதால், அவரது வேலை பழுவை குறைக்க அவ்வப்போது இந்திய அணி நிர்வாகம் இடையிடையே ஓய்வளிக்கும். உதாரணத்திற்கு 3 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நிலையில், அதில் அவர் 2 போட்டிகளிலேயே விளையாடுவார். ஒரு போட்டியில் அவருக்கு பதிலாக வேறு ஒரு பந்து வீச்சாளரை இந்திய அணி பயன்படுத்தும்.
கம்பீரின் பிளான் என்ன?
இந்த சூழலில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகளில் டி20 தொடரில் பங்கேற்ற ஜஸ்பிரித் பும்ரா மூன்றில் இரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டார். முதல் போட்டி மழையால் ரத்தான காரணத்தால் அவர் அப்போட்டியில் விளையாடவில்லை. அதையடுத்து அவர் இரண்டு போட்டியில் விளையாடிவிட்டார். இதனால் நான்காவது போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளன.
ஆனால் அடுத்த போட்டியில் பும்ராவை விளையாட வைப்பதே பயிற்சியாளர் கம்பீரின் திட்டமாக இருக்கும் என தெரிகிறது. அடுத்த போட்டியில் வென்றுவிட்டால் அவருக்கு 5வது போட்டியில் ஓய்வ்வளிக்கலாம் அல்லது இரண்டு போட்டியிலும் கூட அவரை பயன்படுத்தலாம். திட்டம் வேறாக இருந்தால், இப்போட்டியில் பும்ராவை பயன்படுத்தி போட்டியில் வென்றுவிட்டு, வாழ்வா சாவா போட்டியில் அர்ஷ்தீப் சிங்கை பயன்படுத்தலாம். இதெல்லாம் பயிற்சியாளர் கெளம் கம்பீர் கையிலேயே இருக்கிறது. அவர் என்ன மாதிரியான திட்டத்தை வைத்திருக்கிறார் என்பது போட்டியின்போதுதான் இறுதியாக தெரியும்.
பும்ரா விளையாடினால் சாதனைக்கு வாய்ப்பு
ஜஸ்பிரித் பும்ரா இதுவரை 78 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்களை கைபற்றி உள்ளார். நான்காவது போட்டியில் விளையாடினால், அவர் 100 விக்கெட்களை எட்ட வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் 100 விக்கெட்களை டி20 கிரிக்கெட்டில் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் பும்ரா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் 11
இந்தியா: சுப்மான் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), சஞ்சு சாம்சன், சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், டிம் டேவிட், மிட்செல் ஓவன், மார்கஸ் ஸ்டோனிஸ், சேவியர் பார்ட்லெட், நாதன் எல்லிஸ், சீன் அபோட், தன்வீர் சங்கா.
About the Author
                  
                  R Balaji