இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம் 

நாகப்பட்டினம்: இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழகமீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். அவர்களை மீட்கக் கோரி மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நாகை மாவட்​டம் அக்​கரைப்​பேட்​டை, நம்​பி​யார் நகர் மீன்​பிடி துறை​முகத்​தில் இருந்து 3 விசைப்​படகு​களில் 31 மீனவர்​கள் அக்​.31-ம் தேதி கடலுக்கு மீன்​பிடிக்க சென்​றனர். நேற்று முன்​தினம் இரவு இந்​திய எல்லை பகு​தி​யில் மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர் மீனவர்​களை சுற்​றிவளைத்​து, இலங்கை எல்​லைக்​குள் நுழைந்து மீன்​பிடித்​த​தாகக் கூறி, 31 மீனவர்​களை​யும் கைது செய்​தனர். 3 விசைப்​படகு​களை​யும் பறி​முதல் செய்​தனர்.

இதுதொடர்​பாக மத்​திய வெளி​யுறவுத்​ துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்கு முதல்​வர் ஸ்​டா​லின் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதில்கூறி​யிருப்​ப​தாவது: நாகப்​பட்​டினம் மாவட்​டத்​தை சேர்ந்த 31 மீனவர்​களை​யும், அவர்​களது 3 இயந்​திரமய​மாக்​கப்​பட்ட படகு​களை​யும் சிறைபிடித்​துள்ள இலங்​கை கடற்​படை​யினர், அதே நாளில், மற்​றொரு சம்​பவத்​தில், ராம​நாத​புரம் மாவட்​டத்​தை சேர்ந்த 4 மீனவர்​களை​யும், அவர்​களது நாட்​டுப் படகை​யும் சிறைபிடித்​துள்​ளனர்.

தற்​போதைய நில​வரப்​படி, 114 மீனவர்​களும், 247 படகுகளும் இலங்கை வசம் இருக்​கிறது. எனவே, இலங்கை அரசால் சிறைபிடிக்​கப்​பட்​டுள்ள அனைத்து தமிழக மீனவர்​களை​யும், அவர்​களது மீன்​பிடி படகு​களை​யும் விடு​விக்க உடனடி​யாக தூதரக நடவடிக்​கைகளை எடுக்க வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் தெரி​வித்​துள்​ளார்.

அரசி​யல் தலை​வர்​கள் கண்​டனம்:

பாமக தலைவர் அன்​புமணி: தமிழக மீனவர்​கள் கைது செய்​யப்​படும் போதெல்​லாம் மத்​திய அரசுக்கு கடிதம் எழுது​வதுடன் முதல்​வர் ஸ்​டா​லின் அவரது கடமையை முடித்​துக் கொள்​கிறார். அமைச்​சர்​கள் மற்​றும் மீனவர் சமு​தாய பிர​தி​நி​தி​களை அழைத்​துச் சென்று பிரதமரைச் சந்​தித்​து, இப்​பிரச்​சினைக்கு நிரந்​தரத் தீர்வு காணும்​படி வலி​யுறுத்த வேண்​டும்.

தவெக தலை​வர் விஜய்: மீனவர்​கள் 35 பேரையும் உடனடி​யாக விடுவிக்க வேண்​டும். அவர்​களது படகு​களை​யும் மீட்​டுத்தர வேண்​டும். மற்ற மாநில மீனவர்​கள் மீது காட்​டுவதுபோல, எங்​கள் மீனவர்​கள் மீதும் அக்கறை காட்​டி, இதற்​கான நடவடிக்​கைகளை மத்​திய அரசு தாமதமின்றி உடனடி​யாக எடுக்க வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்​ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.