உனக்காகத்தான் என் மனைவியை கொன்றேன்: முன்னாள் காதலிக்கு குறுஞ்செய்தி அனுப்பிய பெங்களூரு மருத்துவர் 

பெங்களூரு: பெங்​களூரு​வில் உள்ள மாரத்தஹள்​ளியை சேர்ந்​தவர் மருத்துவர் மகேந்​திர ரெட்டி (34). இவருக்கும் பெல்​லாரியை சேர்ந்த மருத்துவ​ரான‌ கிருத்​திகா ரெட்​டிக்​கும் (28) கடந்த 2024-ம் ஆண்டு திரு​மண​மான‌து. கிருத்​திகா ரெட்டிக்கு கடந்த ஏப்​ரல் 12-ம் தேதி திடீரென உடல் நலக்​குறைவு ஏற்​பட்டு மயங்கி விழுந்​து உயிரிழந்தார்.

இதையடுத்து போலீ​ஸார் கிருத்​தி​கா​வின் பிரேதப் பரிசோதனையில் அவரது உடலில் சேகரிக்​கப்​பட்ட ரத்த மாதிரி,​உறுப்​புகள் சில​வற்றை தடய​வியல் சோதனைக்கு அனுப்​பினர். அதில் பிர​போல் எனப்​படும் அனஸ்​தீசியா மயக்க மருந்து அளவுக்கு அதி​க​மாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. இதையடுத்து மகேந்​திர ரெட்டி மீது மாரத்​தஹள்ளி போலீ​ஸார் கொலை வழக்​குப்​ப​திவு செய்​து, கடந்த அக்​டோபர் 14-ம் தேதி அவரை கைது செய்​தனர். அவரிடம் மேற்​கொண்டு கொலைக்​கான காரணம் குறித்து விசா​ரணை நடத்​தினர்.

மகேந்​திர ரெட்​டி​யின் செல்​போனை ஆராய்ந்​தனர். கொலை நடந்த 2 வார‌ங்​களுக்கு பிறகு அவர் தன்​னுடன் மருத்​துவ கல்​லூரி​யில் பயின்​றவரும் அவரது முன்​னாள் காதலி​யு​மான பெண் மருத்​து​வருக்​கு, ‘‘நான் உனக்​காகத்​தான் என் மனை​வியைக் கொன்​றேன்’’ என குறுஞ்​செய்தி அனுப்​பி​யுள்​ளார்.

சம்​பந்​தப்​பட்ட பெண் இவரை வாட்ஸ் அப், பேஸ்​புக் உள்​ளிட்ட தளங்​களில் பிளாக் செய்​திருந்​த​தால், டிஜிட்​டல் பணப் பரிவர்த்​தனை செயலி மூல​மாக குறுஞ்​செய்தி அனுப்​பியது தெரிய​வந்​தது.

இதுத​விர மகேந்​திர ரெட்டி வாட்ஸ் அப், டெலிகி​ராம் செயலிகள் மூலம் 4 பெண் தோழிகளுக்கு இதே போன்ற குறுஞ்​செய்​தியை அனுப்​பியதை​யும் போலீ​ஸார் கண்​டறிந்​தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.