மும்பை மாநகராட்சி முடிவால் ஒரு லட்சம் புறாக்கள் இறந்ததாக புகார்: ஜெயின் துறவி சாகும்வரை உண்ணாவிரதம் 

புதுடெல்லி: ம​கா​ராஷ்டிர மாநிலம் மும்​பை​யின் பல பகு​தி​களில் புறாக்​கள் ஏராள​மாக உள்​ளன. இவற்​றுக்கு மும்பை நகர மக்​கள் தானி​யங்​கள் அளிப்​பதும் வழக்​கம். ஆனால், புறாக்​களால் மும்பை நகர் அசுத்​த​மாவ​தாக​வும் மனிதர்​களுக்கு நுரை​யீரல் பாதிப்​பு, சுவாச நோய் பரவுவ​தாகவும் புகார்​கள் எழுகின்​றன.

இதற்கு தீர்வு காண மகா​ராஷ்டிர அரசு, கடந்த ஜுலை 3-ம் தேதி முதல் 51 புறா கூடு​களை அப்​புறப்​படுத்​தி​யது. தாதர் உள்​ளிட்ட பல முக்​கியப் பகு​தி​களில் இருந்த புறாக்​களின் கூடு​களை பிளாஸ்​டிக்​கால் மும்பை நகராட்சி மூடி​விட்​டது.

இதை எதிர்த்து தொடுக்​கப்​பட்ட வழக்​கில் மும்பை நீதி​மன்​றம் தடை விதிக்க மறுத்​து​விட்​டது. மேலும், மும்​பை​யில் புறாக்​களுக்கு உணவளித்த நூற்​றுக்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு அபராதம் விதிக்​கப்​பட்​டது.

இது​போன்ற காரணங்​களால் சுமார் ஒரு லட்​சம் புறாக்​கள் இறந்து விட்​ட​தாக ஜெயின் துறவி நிலேஷ் சந்​திர விஜய் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். மேலும், இவர் மும்பை ஆசாத் மைதானத்​தில் சாகும் வரை உண்​ணா​விரதம் தொடங்கி உள்​ளார். தாதர் பகு​தி​யில் புறாக்​களின் கூடு​களை மீண்​டும் திறக்க வேண்​டும் என்று அவர் வலி​யுறுத்தி உள்​ளார்.

இதுகுறித்து நிலேஷ் சந்​திர விஜய் கூறும்​போது, ‘‘நகரில் பல நூற்​றாண்​டு​களாக புறாக்​கள் வளர்​கின்​றன. இது எங்​கள் மத மரபின் ஒரு பகு​தி. இதை மூடு​வது விலங்​கு​களைக் கொல்​வது போன்​றது. இந்த இயக்​கம், அமை​தி​யாக​வும் உயிரைப் பாது​காக்​க​வும் உள்​ளது. இது பறவை​களுக்​கான வீடு மட்​டுமல்ல, அமைதி மற்​றும் இரக்​கத்​தின் சின்​னம். ஒவ்​வொரு நாளும் 50 முதல் 60 காயமடைந்த அல்​லது நோய்​வாய்ப்​பட்ட புறாக்​களுக்கு சிகிச்சை அளிக்​கப்​படு​கிறது’’ என்​றார்.

புறாக்​களுக்கு ஆதர​வாக மும்​பை​யில் பலரும் குரல் கொடுத்து வரு​கின்​றனர். இதையடுத்து வோர்லி நீர்த்​தேக்​கம், அந்​தேரி சதுப்​புநிலப் பகு​தி, ஐரோலி-​முலுண்ட் சோதனைச் சாவடி மற்​றும் போரிவலி​யில் உள்ள கோரே​கான் மைதானம் ஆகிய பகு​தி​களில் புறாக்​களுக்கு உணவளிக்க மும்பை மாநக​ராட்சி அனு​ம​தித்​துள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.