சென்னை: சென்னையில் போதைப் பொருள் விற்பனை ஜோராக நடைபெற்று வரும் நிலையில், பாரிஸ் கார்னர் பகுதியில் பெண்கள் உள்பட 8 பேர் கொண்ட போதை பொருள் விற்பனை செய்துவந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னையில் போதை கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதை பொருள் உபயோகிப்பதும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகின்றன. சமீபத்தில் கோவியல் இளம் மாணவி ஒருவர் 3 பேர் […]