நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் மோசடி: வழக்குப்பதிவு செய்ய டிஜிபியிடம் பாஜக பொதுச் செயலாளர் மனு 

சென்னை: ‘நக​ராட்சி நிர்​வாகத் துறை​யில் பணி நியமனத்​தில் நடை​பெற்ற மோசடி குறித்து தமிழக காவல்​துறை உடனடி​யாக வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்க வேண்​டும்’ என்று டிஜிபி​யிடம் தமிழக பாஜக பொதுச் செய​லா​ளர் ஏ.பி.​முரு​கானந்​தம் மனு அளித்​துள்​ளார்.

அந்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: 2024-25 மற்​றும் 2025-26-ம் ஆண்​டுக்​கான நகராட்சி நிர்​வாகம் மற்​றும் குடிநீர் வழங்​கல் துறை​யில், காலிப்​பணி​யிடங்​களுக்​காக அதி​காரி​கள் மற்​றும் பணி​யாளர்​களைத் தேர்ந்​தெடுப்​ப​தில் பெரிய அளவி​லான ஊழல்நடந்​திருப்​ப​தாக அமலாக்​கத்
துறை குற்​றம்​சாட்டி உள்​ளது.

அந்​தவகை​யில், 2,538 பதவி​களுக்​கான ஆட்​சேர்ப்பு முறை​யில் அதி​கள​வில் லஞ்​சம் பெற்று மதிப்​பெண்​களில் முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும் என பரிந்​துரை செய்து டிஜிபிக்கு அமலாக்​கத் துறை கடிதம் அனுப்பி இருந்​தது. எனவே, அமலாக்​கத் துறை அனுப்​பிய ஆவணங்​கள் மூலம், ஊழல் தடுப்பு சட்​டம் 7, 13 பிரிவு​கள், பிஎன்​எஸ் பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை நடத்த வேண்டும்.

மேலும், விசா​ரணையை லஞ்ச ஒழிப்​புத்​துறை அல்​லது சிபிசிஐடி-​யிடம் ஒப்​படைக்க வேண்​டும். ஆதா​ரங்​கள் அழிக்​கப்​படு​வதை தடுக்க, அமலாக்​கத் துறை​யின் ஆவணத்​தில் குறிப்​பிட்​டுள்ள அனைத்து டிஜிட்​டல் உள்​ளிட்ட ஆவணங்​களை​ பாது​காக்க வேண்​டும். இவ்​வாறு கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.