“உங்க வெயிட் என்ன?'' – சர்ச்சையான கேள்வி; கோபமான 96 நடிகை கெளரி கிஷன்

தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ போன்ற திரைப்படங்களிலும், மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துத் பிரபலமானார்.

சமீபத்தில் தமிழில் ‘ஹாட் ஸ்பாட்’, ‘போட்’, மலையாளத்தில் ‘சாஹசம்’, மேலும் ‘பேப்பர் ராக்கெட்’, ‘சுழல்’ போன்ற வெப்சீரிஸ்களிலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக 360 டிகிரியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது ‘OTHERS’ என்ற தமிழ் படத்தில் நடித்துவருகிறார்.

Gouri Kishan Interview
Gouri Kishan Interview

இந்நிலையில் இன்று (நவ 6) அப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹிரோவிடம் “கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?” என்று கேள்வி கேட்டதும் கோபமானார் கெளரி கிஷன்.

இதுகுறித்து கோபத்துடன் பேசிய கெளரி, “என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோ கிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்ய போறீங்க?

96 நடிகை கெளரி கிஷன்

ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள்,” என்றார்.

அந்த நபர், “வெயிட் என்னுதானே கேட்டேன்” என நியாயமற்ற முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அதற்கு கௌரி கிஷன், “இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர் கௌரி கிஷனையே மன்னிப்பு கேட்கச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.