இந்தியாவில் நடைபெறும் தேர்தலை பார்வையிட தென்னாப்பிரிக்க எம்.பிக்கள் விருப்பம்

புதுடெல்லி: இந்​திய தேர்​தலை பார்​வை​யிட தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக தேர்​தல் ஆணை​யம் கூறி​யுள்​ளது.

இதுகுறித்து தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் ஒரு​வர் நேற்று கூறிய​தாவது: தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு தென்​னாப்​பிரிக்க தேர்​தல் ஆணை​யத்​தின் தலை​வர் மொசோதோ மோப்​யா​விடம் இருந்து இன்று தொலைபேசி அழைப்பு வந்​தது. சுமார் 7.5 கோடி வாக்​காளர்​களை கொண்ட பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிகர​மாக நடந்​து​முடிய அவர் தனது வாழ்த்​துகளை தெரி​வித்​தார்.

உலகின் மிக​வும் வெளிப்​படை​யான மற்​றும் திறன் வாய்ந்த தேர்​தல் முறை​களில் ஒன்றை பற்றி அறிந்​து​கொள்ள தென்​னாப்​பிரிக்க எம்​.பி.க்​கள் விரை​வில் இந்​தியா வரவிரும்​புவ​தாக அவர் தெரி​வித்​தார். இவ்​வாறு தேர்​தல் ஆணைய செய்​தித் தொடர்​பாளர் கூறி​னார்.

தென்​னாப்​பிரிக்க நாடாளு​மன்​றம் இந்​திய நாடாளு​மன்​றத்தை போல இரு அவை​களை கொண்​ட​தாகும். தேசிய அவை, தேசிய மா​காண கவுன்​சில் என்று அவை அழைக்​கப்​படு​கின்​றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.