திமுகவினர் பணம் சம்பாதிக்க மட்டுமே பயன்படுகிறது அறநிலையத் துறை: அண்ணாமலை குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திக்க மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறது. ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்லை என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலை​தளப் பதி​வில் கூறி​யுள்​ள​தாவது: ஈரோடு மாவட்​டம் பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் மேற்கு மதில்​சுவர் அருகே கோயில் நிர்​வாகத்​தால் அடை​யாளப்​படுத்​தப்​பட்ட 3,150 சதுரஅடி பரப்​பில், நவ.14-ம் தேதி முதல் 2026 ஜன.12-ம் தேதி வரை 60 நாட்​களுக்கு தற்​காலிக கடைகள் அமைத்து வியா​பாரம் செய்து கொள்​ளும் உரிமத்​துக்​கான டெண்​டர் ரூ.16 லட்​சத்​துக்கு விடப்​பட்​டுள்​ளது.

‘ஏலம் எடுத்​தவரே உரிமத்தை அனுபவிக்க வேண்​டும். உள்​வாடகைக்கு விட்​டால், ஏலம் ரத்து செய்​யப்​படும்’ என்று ஏல நிபந்​தனை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. ஆனால், இந்த ஏலத்​தைக் கைப்​பற்​றி​யுள்ள பவானி திமுக நகரச் செய​லா​ள​ருக்கு வேண்​டப்​பட்ட திமுக​வினர், இங்கு உள்ள 34-க்​கும் மேற்​பட்ட கடைகளை, ஒரு கடைக்கு ரூ.80 ஆயிரம் முதல் ரூ.1 லட்​சம் வரை உள்​வாடகைக்கு விட்​டுள்​ளனர்.

வருமான இழப்பு: இதனால், கோயிலுக்கு சுமார் ரூ.20 லட்​சத்​துக்கு மேல் வரு​மான இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.வெறும் ரூ.16 லட்​சத்​துக்கு ஏலம் கொடுத்​து​விட்​டு, விதி​முறை​களை மீறி திமுக​வினர் ரூ.34 லட்​சம் சம்​பா​திப்​ப​தற்​காக மட்​டுமே இந்த ஏலம் நடத்​தப்​பட்​டுள்​ளது.

திமுக ஆட்​சி​யில், இந்து சமயஅறநிலை​யத் துறை முழுக்க முழுக்க திமுக​வினர் பணம் சம்​பா​திப்​ப​தற்​காக மட்​டுமே பயன்​படுத்​தப்​படு​கிறதே தவிர, ஆலய மேம்​பாட்​டுக்​குப் பயன்​படுத்​தப்​படு​வது இல்​லை. அறநிலை​யத் துறை அமைச்​சருக்​கு, தனது துறை​யின் முறை​கேடு​களை கவனிக்க நேரம் இல்​லை. கட்​சி​யில் யார் பெரிய​வர் என்ற போட்​டி​யில் மட்​டுமே கவனம் இருக்​கிறது.

உள்​வாடகைக்கு விட்​டால் ஏலம் ரத்து செய்​யப்​படும் என்ற ஏல நிபந்​தனை​களின்​படி, பவானி சங்​கமேஸ்​வரர் கோயில் ஏலத்தை உடனே ரத்து செய்து மறுஏலம் விட​வேண்​டும். அறநிலை​யத் துறையை தாங்​கள் கொள்​ளை​யடிக்​கும் துறை​யாக மாற்​றி​யிருப்​பதை தி​முக​வினர் உடனே நிறுத்​திக் கொள்ள வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​துள்​ளார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.