Jananayagan: 'பறக்கட்டும் நம்ம கொடி'- ஜனநாயகன் படத்தின் முதல் சிங்கிள் தளபதி கச்சேரி பாடல் வெளியானது

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வருகிறது.

இதுதான் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் ரிலீஸுக்கு ரசிகர்களும் ஆவலாகக் காத்திருக்கிறார்கள். அ.வினோத் இயக்கும் இப்படத்தை கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

Thalapathy Kacheri - Jananayagan
Thalapathy Kacheri – Jananayagan

6-வது முறையாக விஜய் நடிக்கும் படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ப்ரியாமணி, மமிதா பைஜு எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். பொங்கல் ரிலீஸுக்காக படத்தின் இறுதிக்கட்டப் பணிகளும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இன்று படத்தின் முதல் பாடலான ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகியிருக்கிறது. துள்ளலான இசை, அதிரடி நடனம் என விஜய்யின் இன்ட்ரோ பாடல்கள் எப்போதுமே ரசிகர்களுக்கு புல் மீல்ஸ்தான்!

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகியிருக்கும் இந்தப் பாடலை விஜய், அனிருத், அறிவு என மூவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள். ராப் பாடகர் அறிவு இப்பாடலை எழுதியிருக்கிறார்.

இந்தப் பாடலில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவும், மமிதா பைஜூவும் இணைந்து நடனமாடியிருக்கிறார்கள். நடன இயக்குநர் சேகர் இப்பாடலுக்கு கோரியோ செய்திருக்கிறார்.

இப்பாடலின் ஹூக் ஸ்டெப் நடன காணொளியையும் இப்போது வெளிவந்திருக்கும் லிரிகல் வீடியோவில் இணைத்திருக்கிறார்கள். ̀பறக்கட்டும் நம்ம கொடி’, ̀சாதி, மதம் லேதய்யா’ போன்ற வரிகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடதக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.