புதுடெல்லி: வாக்காளர் பட்டியல் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, மனிதநேயமக்கள் கட்சி உள்ளிட்டவை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகின்றன.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைஅறிவித்த தேர்தல் ஆணையத்தின் அக். 27-ம் தேதியிட்ட அறிக்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தையும் மீறுவதாக உள்ளதால், திருத்த நடவடிக்கைகளுக்கு தடை கோரி திமுக சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பி.சண்முகம், மமக சார்பில் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை,புதுவை திமுக அமைப்பாளர் ஆர்.சிவா உள்ளிட்டோரும் ரிட்மனு தாக்கல் செய்துள்ளனர்.அனைத்து மனுக்களையும், பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்த மனுக்களுடன் இணைத்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.