எம்பி, எம்எல்ஏ மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பிறகும் தாமதிக்க கூடாது: தலைமை நீதிபதி அமர்வு கண்டிப்பு 

சென்னை: ‘எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ரான வழக்​கு​களில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட பிறகும் குற்​றச்​சாட்​டுப்​ப​திவை மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது ஏற்​புடையதல்ல’ என சிறப்பு நீதி​மன்​றங்​களை உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு கண்​டித்​துள்​ளது.

உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தமிழகம் முழு​வதும் சிறப்பு நீதி​மன்​றங்​களில் நிலு​வை​யில் உள்ள எம்​.பி,எம்​எல்​ஏ-க்​கள் மீதான வழக்கு விசா​ரணை​களைக் கண்​காணித்து வரும் சென்னை உயர் நீதி​மன்​றம் இது தொடர்​பாக கடந்த 2020-ம் ஆண்டு தாமாக முன்​வந்து வழக்​காக எடுத்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்​.எம்​. ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அமர்​வில் நேற்று மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது.

இந்த வழக்​கில் நீதி​மன்​றத்​துக்கு உதவ நியமிக்​கப்​பட்ட மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன், “தமிழகத்​தில் எம்​.பி, எம்​எல்​ஏ-க்​களுக்கு எதி​ராக 193 வழக்​கு​களும், புதுச்​சேரி​யில் 23 வழக்​கு​களும் என 216 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன” என்​றார். அதையடுத்து நீதிப​தி​கள், “இதில் பல வழக்​கு​கள் உச்ச நீதி​மன்​றம் மற்​றும் உயர் நீதி​மன்​றத்​தின் இடைக்​கால தடை​யுத்​தர​வு​கள் காரண​மாக பல ஆண்​டு​களாக சிறப்பு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ளன. எனவே எத்தனை வழக்​கு​களில் தடை​யுத்​தரவு உள்​ளன என்ற விவரங்​களை 2 வாரத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். தடை​யுத்​தரவு இல்​லாத வழக்​கு​களை​யும், 5 ஆண்​டுகளுக்கு மேல் நிலு​வை​யில் உள்ள வழக்​கு​களை​யும் சிறப்புநீதி​மன்​றங்​கள் தனிக்​கவனம் செலுத்தி விரை​வாக விசா​ரித்து முடிக்க வேண்​டும்.

குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட வழக்​கு​களில் குற்​றம்​சாட்​டப்​பட்​ட​வர்​களிடம் குற்​றச்​சாட்டு பதிவைக்​கூட இன்​னும் மேற்​கொள்​ளாமல் காலம் தாழ்த்​து​வது கண்​டிப்​புக்குரியது. இந்த வழக்​கு​களுக்கு அதி​முக்​கி​யத்​து​வம் கொடுத்து விசா​ரிக்க வேண்​டும். சாட்சி விசா​ரணை​யை​யும் விரைந்து முடிக்க வேண்​டும்” என்​றனர். அப்​போது, சென்னை உள்பட பல்​வேறு இடங்​களில் எம்​.பி, எம்​எல்​ஏ-க்​கள் வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றங்​கள் போதிய இடவசதி இல்​லாமல் குறுகிய இடத்​தில்செயல்​பட்டு வரு​வ​தாக மூத்த வழக்​கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் தெரி​வித்தார்.அதையடுத்து நீதிப​தி​கள், இதுதொடர்​பாக உயர் நீதி​மன்ற தகவல் தொழில்​நுட்ப பதி​வாளரிடம் விவரம் பெற்று தலை​மைப் பதி​வாளர் அறிக்கை தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை நவ.25-க்​கு தள்​ளி​வைத்​துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.