இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி-யில் வெளியாகியிருக்கும் படங்கள், சீரிஸ் லிஸ்ட் இங்கே!
காந்தா:
இயக்குநருக்கும், நடிகருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதல் என 1950களில் நடக்கும் கதைதான் இந்த காந்தா. நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்துள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கும்கி 2:
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற கும்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் கும்கி 2. அறிமுக நடிகர் மதி, மற்றும் நடிகை ஷ்ரிதா ராவ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் மாஃபியா கம்பெனி:
நடிகர்கள் ஆனந்த் ராஜ், முனீஸ் காந்த், தீபா, சம்யுக்தா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கிணறு:
சிறுவர்களின் வாழ்க்கை மற்றும் கண்ணோட்டத்தில் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தாவுத்:
நடிகர்கள் லிங்கா தீனதயாளன், திலீபன், ஷா ரா, ராதாரவி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆட்டோகிராஃப் (Re Release):
சேரன் இயக்கத்தில் கடந்த 2004-ல் வெளியான ‘ஆட்டோகிராஃப்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸாகிறது.
Athibheekara Kaamukan (மலையாளம்):
நடிகர்கள் லுக்மான், த்ரிஷ்யா ரகுநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Amos Alexander (மலையாளம்):
த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் ஜாஃபர் இடுக்கி மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Nidhiyum Bhoothavum (மலையாளம்):
காமெடி த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் நடிகர்கள் பிரமோத் வெலியனாத், அஸ்வத் லால் நடித்துள்ளனர். இத்திரைப்படம் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Santhana Prapthirasthu (தெலுங்கு):
நடிகர்கள் விக்ராந்த் ரெட்டி, சாந்தினி சௌத்ரி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Gatha Vaibhava (கன்னடம்):
நடிகர்கள் துஷ்யந்த், ஆஷிகா ரங்கநாத் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Love OTP (கன்னடம்):
நடிகர்கள் அனிஷ் தேஜேஸ்வர், ஸ்வரூபினி ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
De De Pyaar De 2 (இந்தி):
நடிகர்கள் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள காமெடி திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
The Running Man (ஆங்கிலம்):
க்ளென் பவல் நடிப்பில், எட்கர் ரைட் இயக்கத்தில் உருவாகியுள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Now You See Me : Now You Don’t (ஆங்கிலம்):
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரூபன் ஃப்ளெய்ச்சர் இயக்கத்தில், நடிகர்கள் டேவ் ஃப்ராங்கோ, ஜஸ்டிஸ் ஸ்மித் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இது, இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
The Spiderman (Re-release):
சாம் ரெய்மி இயக்கத்தில், டோபி மாகுவைர் நடிப்பில் உருவாகி, வெளிவந்து இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட் ஸ்பைடர்மேனாக இருப்பது தான் தி ஸ்பைடர்மேன் வரிசை திரைப்படங்கள். இந்த வரிசையில் வெளிவந்த 3 திரைப்படங்களும் இன்று (நவம்பர் 14) திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

தியேட்டர் டூ ஓடிடி:
டியூட் – Netflix – 14 November
Avihitham – JioHotstar – 14 November (மலையாளம்)
Telusu Kada – Netflix – 14 November (தெலுங்கு)
K-Ramp – Aha Video – 15 November (தெலுங்கு)
Nishaanchi – Prime Video – 14 November (இந்தி)
Jolly LLB – JioHotstar & Netflix – 14 November (இந்தி)
Jurassic Park: Rebirth – JioHotstar – November 14 (ஆங்கிலம்)
ஓடிடி தொடர்கள்:
Delhi Crime Season 3 – Netflix – 13 November (இந்தி)