கொல்கத்தா,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் அடுத்த மாதம் (டிசம்பர்) 16-ந்தேதி அபுதாபியில் நடைபெறுகிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை நாளைக்குள் 10 அணிகளும், ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன்பாக பரஸ்பர பேச்சுவார்த்தையின் மூலம் வீரர்கள் வர்த்தக பரிமாற்றம் நடந்து வருகிறது. முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற 18-வது சீசனில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய கொல்கத்தா அணி புள்ளி பட்டியலில் 8-வது இடம் பிடித்து வெளியேறியது. இதனால் வரும் சீசனுக்கு முன்னதாக தங்களது அணியை பலப்படுத்தும் நோக்கில் கொல்கத்தா நிர்வாகம் பல மாற்றங்களை செய்து வருகிறது. அதன்படி அந்த அணியின் பயிற்சியாளர் குழுவில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் , கொல்கத்தா அணியில் இருந்து வெங்கடேஷ் அய்யர் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ரூ.23.75 கோடி கொடுத்து வெங்கடேஷ் அய்யரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது.
வெங்கடேஷ் அய்யர் விடுக்கப்பட்டால் கொல்கத்தா அணி அதிக தொகையுடன் ஏலத்தில் பங்கேற்கும்.