பாட்னா,
பீகார் தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பில் கூறியதை விட, அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து உள்ளது. இந்த தேர்தல் முடிவை தான் இப்போது மொத்த நாடும் உற்று பார்த்துக்கொண்டு இருக்கிறது.
இந்த முறை பாஜக, என்.டி.ஏ உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி, இமாலய வெற்றியை பெறுகிறது. மொத்த முள்ள 243 தொகுதிகளில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் என்.டி.ஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில், நிதிஷ்குமார் எக்ஸ் தள பதிவில்,
மாநிலத்தின் அனைத்து வாக்காளர்களுக்குன் நான் தலைவணங்குகிறேன். மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். பீகார் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. பீகார் மேலும் முன்னேறி, நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்கள் பட்டியலில் சேரும். பிரதமர் மோடி அளித்த ஆதரவுக்கு தலைவணங்குகிறேன்.மகத்தான வெற்றிக்கு உதவிய பிரதமர் மோடி, சிராக் பஸ்வான், ஜிதன் ராம் மஞ்சி உள்ளிட்டோருக்கு நன்றி.
என அதில் பதிவிட்டுள்ளார்.