வருங்காலத்தில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்: உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் நம்பிக்கை 

மதுரை: பெண் வழக்​கறிஞர்​கள் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், வருங்​காலத்​தில் பெண் நீதிப​தி​களின் எண்​ணிக்கை அதி​கரிக்க வாய்ப்​புள்​ள​தாக உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் தெரி​வித்​தார்.

உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு வழக்​கறிஞர்​கள் சங்​கம் (எம்​பிஏ) சார்​பில், நீதித்​துறை தேர்​வுக்​குத் தயா​ராகி வரும் இளம் வழக்​கறிஞர்​களுக்​கான வார இறுதி நாள் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. சங்​கத் தலை​வர் எம்​.கே.சுரேஷ் தலைமை வகித்​தார். செயலர் ஆர்​.வெங்​கடேசன் வரவேற்​றார். பயிற்சி வகுப்​பைத் தொடங்​கி​வைத்து உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் பேசி​ய​தாவது: கீழமை நீதி​மன்​றம், உயர் நீதி​மன்​றம் என்று பிரித்​துப் பார்க்​காமல், அனைத்​தை​யும் நீதி வழங்​கும் அமைப்​பு​களாக கருத வேண்​டும். தற்​போது பெண் வழக்​கறிஞர்​கள் அதி​கரித்து வரு​கின்​றனர்.

இதனால், தமிழகம் மற்​றும் ராஜஸ்​தான் உள்​ளிட்ட மாநிலங்​களில் நீதிப​தி​கள் தேர்​வில் பெண்​கள் அதி​க​மானோர் தேர்ச்சி பெற்று வரு​கின்​றனர். இந்த எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்​கும் என்று எதிர்​பார்க்​கிறோம். வருங்​காலத்​தில் ஏராள​மான பெண் வழக்​கறிஞர்​கள், நீதிப​தி​களாக தேர்​வாக அதிக வாய்ப்​பு​கள் உள்​ளன.

நீதித்​துறை தேர்​வுக்​கு இளம் வழக்​கறிஞர்​கள் தயா​ராவது பாராட்டுக்குரியது. போட்டி அதி​க​மாக இருந்து சிலருக்கு வாய்ப்பு கிடைக்​காமல் இருந்​தால், அவர்​கள் உயர் நீதி​மன்​றத்​தில் சிறந்த வழக்​கறிஞ​ராகப் பணி​யாற்​றலாம். தன்​னம்​பிக்​கை, ஆர்​வம் மற்​றும் விடா​முயற்​சி​யுடன் இளம் வழக்​கறிஞர்​கள் நீதித்​துறை தேர்​வுக்கு தொடர்ந்து பயிற்சி மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு உச்ச நீதி​மன்ற நீதிபதி எம்​.எம்​.சுந்​தரேஷ் பேசி​னார்.

உயர் நீதி​மன்ற மூத்த நீதிபதி ஆர்​.சுரேஷ்கு​மார், உயர் நீதி​மன்ற நிர்​வாக நீதிபதி அனி​தா, நீதிப​தி​கள் வேல்​முரு​கன், அப்​துல்​குத்​தூஸ், ம​தி, குமரேஷ்​பாபு, வடமலை, குமரப்​பன் மற்​றும் கூடு​தல் தலைமை வழக்​கறிஞர்​கள் வீரா கதிர​வன், பாஸ்​கரன் உள்​ளிட்ட வழக்​கறிஞர்​கள்,சங்க துணைத் தலை​வர்​கள் மகேஷ்​பாபு, சுபபிரி​யா, பரேக்​கு​மார் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​. சங்​கப்​ பொருளாளர்​ ஜி.​ராஜா நன்​றி கூறினர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.