ஐபிஎல் 2026ம் ஆண்டுக்கான மினி ஏலத்திற்கு முன்னதாக, ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் முழுமையான பட்டியலை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கோப்பையை வென்ற பிறகு, மும்பை அணி எதிர்பார்த்த அளவு சிறப்பாக செயல்படவில்லை. 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த அந்த அணி, 2025ம் ஆண்டில் குவாலிஃபையர் 2 வரை முன்னேறியது. இந்த நிலையில், வரவிருக்கும் சீசனுக்காக அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Add Zee News as a Preferred Source

தக்கவைக்கப்பட்ட வீரர்கள்
ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ராபின் மின்ஸ், ரியான் ரிக்கெல்டன், நமன் திர், மிட்செல் சான்ட்னர், வில் ஜேக்ஸ், கார்பின் போஷ், ராஜ் பவா, டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, தீபக் சாஹர், அஷ்வனி குமார், ரகு சர்மா, ஏ.எம். கஃபன்சார், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், ஷர்துல் தாக்கூர், மயங்க் மார்கண்டே.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
சத்யநாராயணா ராஜு, ரீஸ் டாப்லி, கே.எல். ஸ்ரீஜித், கர்ன் சர்மா, பெவன் ஜேக்கப்ஸ், முஜீப் உர் ரஹ்மான், லிசாட் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர், அர்ஜுன் டெண்டுல்கர்.
டிரேட் மூலம் வந்த வீரர்கள்:
ஏலத்திற்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி மற்ற அணிகளிடமிருந்து சில வீரர்களை டிரேட் மூலம் வாங்கியுள்ளது.
ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து)
ஷர்துல் தாக்கூர் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து)
மயங்க் மார்கண்டே (கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து)
ஏன் இந்த மாற்றம்?
ஐந்து முறை சாம்பியன் பட்டம் என்ற மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது ஆறாவது கோப்பைக்காக பல முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியில் இருந்து தங்கள் அணிக்கு கொண்டு வந்தனர். மேலும் ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன்சி பொறுப்பை பறித்து ஹர்திக் பாண்டியாவிற்கு கொடுத்தனர். இருப்பினும் அவர்களால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கு முன்னதாக அணியில் உள்ள சில முக்கிய வீரர்களையும் அவர்கள் நீக்கி உள்ளனர். ஏல பர்ஸ் மதிப்பு 2 கோடி மட்டுமே உள்ள நிலையில் அவர்களால் இந்த மினி ஏலத்தில் எந்த ஒரு முக்கிய வீரரையும் வாங்க முடியாது. ஆனால் டிரேடு மூலம் சில வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கனவே பெற்றுள்ள்ளதால் அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியின் உத்ததேச பிளேயிங் 11
ரோஹித் சர்மா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் (டிரேட்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), வில் ஜேக்ஸ், நமன் திர், ஷர்துல் தாக்கூர் (டிரேட்), தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
இம்பாக்ட் பிளேயர்: மயங்க் மார்கண்டே.
About the Author
RK Spark