சாம்சன் முதல் ஹர்திக் வரை… IPL-ல் கேப்டன்களே விற்கப்பட்ட மெகா 'டிரேடிங்' மர்மங்கள்!

IPL : ஐபிஎல் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. போட்டி நடக்கும் களத்தில் மட்டுமல்ல, அதற்கு முன்பாக நடக்கும் பிளேயர்களின் டிரேடிங் மற்றும் ஏலத்தில் இருந்தே இந்த பரபரப்பு தொடங்கிவிடும். அந்தவகையில், இந்த ஆண்டு பிளேயர்கள் டிரேடிங் முடிந்திருக்கிறது. அடுத்ததாக ஐபிஎல் 2026 ஏலம் நடக்க உள்ளது. வழக்கத்தைப்போலவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் பிளேயர்களின் டிரேடிங் நடந்திருக்கிறது. இந்த ஆண்டு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்த்திரம் ரவீந்திர ஜடேஜா வர்த்தகம் செய்யப்பட்ட மெகா டீல், ஐபிஎல் வரலாற்றின் நான்காவது கேப்டன் வர்த்தகமாக மாறியிருக்கிறது. அந்தவகையில், ஐபிஎல் தொடரில் கேப்டன்களே விற்பனை செய்யப்பட்ட 4 டிரேடிங் குறித்த சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம். 

Add Zee News as a Preferred Source

1. ரவிச்சந்திரன் அஸ்வின் – டிரேட் செய்யப்பட்ட முதல் கேப்டன்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான், ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணிக்கு கேப்டனாக இருந்தபோது வர்த்தகம் செய்யப்பட்ட முதல் வீரர் என்ற வரலாற்றைப் படைத்தவர். அவர் அப்போது கிங்ஸ் XI பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணியின் கேப்டனாகச் செயல்பட்டார். அஸ்வின் தலைமையில் அந்த அணி இரண்டு சீசன்களில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதன் விளைவாக, அஸ்வின் தானே அணியை விட்டு வெளியேற விரும்பினார். பஞ்சாப் அணி, ரூ.7 கோடிக்கும் அதிகமான தொகைக்கு அஸ்வினை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்தது.

டெல்லியில் நிலை: டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்குச் சென்ற அஸ்வின் அங்கே கேப்டனாக நியமிக்கப்படவில்லை. ஆனாலும், புதிய அணியில் அவர் தன்னை ஒரு ‘ஆல்-ஃபேஸ் ஸ்பின்னர்’ (All-Phase Spinner) ஆக நிலைநிறுத்திக் கொண்டார். மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்துவதிலும், முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் அவர் ஒரு விலைமதிப்பற்ற அங்கம் வகித்தார். டெல்லி அணி சாம்பியன் ஆகாவிட்டாலும், அணியின் வெற்றியில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

2. அஜிங்க்யா ரஹானே 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, அந்த அணியின் தூணாக இருந்தவர் அஜிங்க்யா ரஹானே. இவரும் கேப்டன் பொறுப்புக்குப் பிறகு வர்த்தகம் செய்யப்பட்டவர் தான். 2019 சீசனின் நடுப்பகுதியில், ராஜஸ்தான் அணி நிர்வாகம் திடீரென ரஹானேவை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, ஸ்டீவ் ஸ்மித்தை நியமித்தது. கேப்டன் பதவி பறிக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ரஹானேவை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்தது.

இந்த வர்த்தகம் பணம் சார்ந்ததாக இல்லாமல், ஒரு நேரடி வீரர் பரிமாற்றமாக அமைந்தது. ரஹானேவுக்குப் பதிலாக, ராஜஸ்தான் அணி மயங்க் மார்கண்டே மற்றும் ராகுல் டெவாட்டியா ஆகிய இரண்டு இளம் வீரர்களைப் பெற்றது. ஒரு கேப்டனாக அணியை வழிநடத்திய அனுபவத்தை வைத்திருந்த ரஹானே, அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை இழந்ததால் வர்த்தகம் செய்யப்பட்டார்.

3. ஹர்திக் பாண்டியா – ‘ஆல்-கேஷ்’ டீல்

ஐபிஎல் வரலாற்றிலேயே மிகவும் அதிக அளவில் பேசப்பட்ட,  சர்ச்சைக்குரிய வர்த்தகம் என்றால் அது ஹர்திக் பாண்டியாவுடையது தான். மும்பை இந்தியன்ஸ் அணியில் கிரிக்கெட்டைக் கற்றுக்கொண்டு, அங்கிருந்து வெளியேறி, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகச் சென்று, முதல் சீசனிலேயே கோப்பை வென்றார். அடுத்த சீசனில் இறுதிப் போட்டிக்கும் அழைத்துச் சென்றார். அப்படிப்பட்ட ஒரு கேப்டன், குஜராத் அணியால் ‘ஆல்-கேஷ், ஒன்-வே’ டீல் மூலம் மும்பை இந்தியன்ஸுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

அப்போது, மும்பை அணிக்கு நிதி கட்டுப்பாடு சிக்கல் இருந்ததால், ஐபிஎல் விதிப்படி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக்கை வாங்கப் போதுமான பணம் அப்போது இருக்கவில்லை. இந்த நேரத்தில், கேமரூன் கிரீனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்குப் பெரிய தொகைக்கு வர்த்தகம் செய்து, மும்பை அணி தனது பட்ஜெட்டை சமன் செய்தது. இதைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வர்த்தகம் செய்யப்பட்டார். மும்பை திரும்பிய பாண்டியா, அந்த அணியின் ஜாம்பவான் கேப்டன் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த முடிவு மும்பை ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்தது. வான்கடே மைதானத்திலேயே ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்கள் கூச்சலிட்டனர். 

4. சஞ்சு சாம்சன் 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருந்த சஞ்சு சாம்சன் வர்த்தகம் செய்யப்பட்டிருப்பது, இந்த ஆண்டின் ஹாட் டாப்பிக். சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிரந்தர கேப்டனாகக் கருதப்பட்ட நிலையில், அவர் ஒரு மிக முக்கியமான பரிமாற்றத்திற்காக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அணியில் இருந்து ராஜஸ்தான் அணிக்கு ரவீந்திர ஜடேஜா செல்ல விரும்பியதால், அவரை வாங்க அந்த அணியும் ஆர்வம் காட்டியது. இதனை தொடர்ந்து சிஎஸ்கே அணியுடன் பேசி சஞ்சு சாம்சனை கொடுத்துவிட்டு, ரவீந்திர ஜடேஜாவை தங்கள் அணிக்கு வாங்கியுள்ளது ராஜஸ்தான் அணி. 

மேலும் படிக்க: கேமரூன் கிரீன் வேண்டாம்.. அவருக்கு பதிலா CSK இந்த வீரரை வாங்கினா சூப்பரா இருக்கும்!

மேலும் படிக்க: ரிஷப் பண்ட் டூ விராட் கோலி: அதிக விலைக்கு தக்கவைக்கப்பட்ட ஐபிஎல் வீரர்களின் பட்டியல்!

About the Author


Karthikeyan Sekar

I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.