பேர்ஸ்டோவை கலாய்த்து தள்ளிய ஆஸி வீரர்கள்… வைரலாகும் வீடியோ!

Jonny Bairstow Viral Video: வரவிருக்கும் ஆஷஸ் தொடர் தொடங்குவதற்கு முன்பே, ஆஸ்திரேலிய வீரர்கள் நகைச்சுவை மற்றும் கலாய்ப்பு மூலம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளனர். இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ குறித்து அவர்கள் தெரிவித்த பதில்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Add Zee News as a Preferred Source

ஆஷஸ் தொடர் வரும் 21ம் தேதி தொடக்கம்

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் டிசம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் ஆரம்பமாகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்காக இரு அணிகளும் தீவிரத் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான ஆஷஸ் மோதல் உலக கிரிக்கெட்டின் மிகப் பழமையான மற்றும் பெருமைமிக்க தொடராக கருதப்படுகிறது.

‘பேர்ஸ்டோ’ என்றதும் சிரித்த ஆஸி வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு வீரர்கள் குறித்து கேள்வி எழுப்பி, கலாய்க்கும் வழக்கம் அங்குள்ள ஊடகங்கள் மற்றும் வீரர்களிடையே வழக்கமானது. இதற்காக சமீபத்தில் ஆஷஸ் முன் நடைபெற்ற ஊடக உரையாடல் நிகழ்வில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் பங்கேற்றனர். இங்கிலாந்து அணியின் வீரர்கள் பற்றி கேள்விகள் விடுக்கப்பட்டபோது, பென் ஸ்டோக்ஸ் பெயர் கேட்கப்பட்டதும், அனைவரும் அவரை “மிகப்பெரிய ஆட்டக்காரர்” என பாராட்டினர்.

அதே சமயம், “பேர்ஸ்டோ” பெயர் கேட்கப்பட்டவுடனே எல்லா வீரர்களும் உடனே சிரித்து விட்டனர். பேட் கம்மின்ஸ் “கீப்பர்” என சிரிக்கச் சொல்ல, சாம் கான்ஸ்டாஸ் “அட்டக்கிங்”, கிரீன் “ரன் அவுட்”, ஹேசில்வுட் “சிவப்பு முடி”, கவாஜா “ஸ்டெம்பிங்” எனவும், மேக்ஸ்வெல் “ஸ்டங்க்” எனவும் கூறினர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான பகிர்வுகளைக் பெற்றுள்ளது. 

கிண்டல் ஏன்?

ஆஸ்திரேலிய வீரர்கள் இவ்வாறு நையாண்டியாகச் சொல்வதற்குக் காரணம் ஒரு முக்கிய சம்பவம் இருக்கிறது. கடந்த ஆஷஸ் தொடரில் பேர்ஸ்டோ தேவையில்லாமல் கிரிஸ் விட்டுச் வெளியேறும்போது, ஆஸி அணியின் கீப்பர் சிறப்பாக ஸ்டெம்பிங் செய்து அவரை அவுட் செய்திருந்தார். அந்த நினைவைக் குறிப்பிடும் வகையில் தற்போது வீரர்கள் அவனை “ஸ்டங்க்” மற்றும் “ரன் அவுட்” என்று சிரித்துக் கூறியுள்ளனர்.

ரசிகர்கள் கருத்துகள்

இந்த கலாய்ப்பு வீடியோ வெளியாகியதும், ரசிகர்கள் இரு அணிகளின் ரசிகர்கள் மத்தியில் கலகலப்பாக பேசப்படுகிறது. சிலர் இதனை “ஆஷஸ் தொடங்கும் முன்பே வார்ம்அப் நகைச்சுவை” எனக் குறிப்பிட, சிலர் “பேர்ஸ்டோ பதிலுக்கு மைதானத்தில் காட்டுவார்” என எதிர்பார்க்கின்றனர். இங்கிலாந்து அணியும் இதை நகைச்சுவையுடன் எடுத்துக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி தற்போது பெர்த் மைதானத்தில் விறுவிறுப்பான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

 

 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.