Vodafone Idea Prepaid Recharge Plans: வோடபோன் ஐடியா (Vodafone Idea – VI) புதிய பயனர்களை ஈர்க்கவும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடவும் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டம், நீண்ட காலத்திற்கான பேச்சு நேரம் (Talktime), அதிவேக டேட்டா (Data) மற்றும் 80 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகும் காலத்திற்கு இலவச குரல் அழைப்புகளை வழங்குகிறது.
Add Zee News as a Preferred Source
VI ப்ரீபெய்டு திட்டம் – VI Prepaid Plan
வோடபோன் ஐடியா நிறுவத்தின் புதிய ப்ரீபெய்ட் (Prepaid Plans) திட்டத்தின் விலை ₹549 ஆகும். இந்த ரீசார்ஜ் திட்டம், டேட்டாவை விட அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டது. இந்த பேக்கின் அம்சங்களைப் பொறுத்தவரை, இது அன்லிமிடெட் அழைப்புகள் (Unlimited Calling) மற்றும் 1,000 எஸ்எம்எஸ்ஸுடன், 7 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது.

இந்த ரீசார்ஜ் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும். நீங்கள் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால், அடுத்த இரண்டரை மாதங்களுக்கும் மேலாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
பிற சலுகைகள் கிடைக்காது
இந்தத் திட்டம் மற்ற ப்ரீபெய்ட் பேக்குகளைப் போல OTT மற்றும் டேட்டா ரோல்ஓவர் போன்ற நன்மைகளை வழங்காது என்று தொலைத்தொடர்பு நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இந்த பேக்கை மொபைல் எண்ணை செயலில் வைத்திருக்கப் பயன்படுத்தலாம்.
எங்கிருந்து எப்படி ரீசார்ஜ் செய்வது?
வோடபோன் ஐடியாவின் (Vodafone Idea) புதிய ப்ரீபெய்ட் திட்டம் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அன்லிமிடெட் டாப் என்கிற பக்கத்தில் சென்று ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் நீங்கள் கூகிள் பே (Google Pay), ஃபோன்பே (PhonePe) அல்லது பேடிஎம் (Paytm) ஐப் பயன்படுத்தியும் ரீசார்ஜ் செய்துக் கொள்ளலாம்.
இந்த திட்டம் அக்டோபரில் தொடங்கப்பட்டது.
Vi நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1149க்கு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
செல்லுபடியாகும் காலம்: இது 180 நாட்கள் (சுமார் 6 மாதங்கள்) செல்லுபடியாகும்.
டேட்டா: இந்தத் திட்டம் மொத்தமாக 20 ஜிபி டேட்டாவை (அனைத்துக் காலத்திற்கும்) வழங்குகிறது.
டேட்டாவிற்குப் பிந்தைய கட்டணம்: 20 ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, ஒரு MB-க்கு 50 பைசா டேட்டா வசூலிக்கப்படும்.
அழைப்பு (வாய்ஸ் கால்): இது வரம்பற்ற (Unlimited) உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை (மற்ற நெட்வொர்க்குகள் உட்பட) வழங்குகிறது.
எஸ்எம்எஸ்: இந்தத் திட்டத்தில் மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ்கள் (1,800 அல்ல) அடங்கும்.
About the Author
Vijaya Lakshmi