
பெங்களூரு: கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம் குப்பியை அடுத்துள்ள குனிகலை சேர்ந்தவர் சாலுமரத திம்மக்கா(114). திருமணமாகி குழந்தை பாக்கியம் அமையாததால் தனது கணவருடன் இணைந்து கர்நாடக மாநிலம் முழுவதும் பயணம் செய்து லட்சக்கணக்கான மரங்களை நட்டார்.
இதனால் மரங்களின் தாய் என சாலுமரத திம்மக்கா அழைக்கப்பட்டார். இவரது சேவைக்காக கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது, மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது.
முதுமையின் காரணமாக திம்மக்கா பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலமானார். இதைத்தொடர்ந்து கலா கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் திம்மக்காவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.