புதுடெல்லி,
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோக்கனஸ்பர்க்கில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவுக்கு 3 நாள் பயணமாக சென்றுள்ளார். இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக கூறி உள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:
“தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் புறக்கணிப்பதால், பிரதமர் நரேந்திரமோடி பாதுகாப்பாக கலந்து கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு கோலாலம்பூரில் நடந்த ஆசியான் உச்சி மாநாட்டிற்கு மோடி செல்லவில்லை. சென்றிருந்தால் டிரம்பை நேருக்கு நேர் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் அவர் போகவில்லை.
இந்த உச்சிமாநாடு அடுத்த அண்டு அமெரிக்காவில் நடைபெறும்போது அதற்குள் அமெரிக்காவுடனான இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிடும். அப்போது ‘எனது நல்ல நண்பருடன்’ என்ற வார்த்தைகள் உங்களால் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுமோ?
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.