இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர், பந்துவீச்சாளராக தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் (SMAT 2025) யாரும் எதிர்பாராத வகையில், ஒரு தொடக்க ஆட்டக்காரராக புதிய அவதாரம் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். சச்சின் டெண்டுல்கரை போலவே அவரது மகனும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு. மும்பை அணியில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் கோவா அணிக்கு மாறிய அர்ஜுன், அங்கு ஆல்-ரவுண்டராக ஜொலித்து வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை மீண்டும் ரூ.30 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால் அவரை லக்னோ Trade செய்துள்ளது. இந்த சூழலில் தான், கோவா அணிக்காக அவர் புதிய இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.
Add Zee News as a Preferred Source
Arjun Tendulkar opens the batting for Goa in the first match of the Syed Mushtaq Ali Trophy season against Uttar Pradesh. Likely to open the bowling later too. #SMAT2025
— Lalith Kalidas (@lal__kal) November 26, 2025
ஓப்பனிங்கில் கலக்கிய அர்ஜுன்
கொல்கத்தாவில் நடைபெற்ற உத்தர பிரதேச அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், கோவா அணி நிர்வாகம் அர்ஜுன் டெண்டுல்கரை தொடக்க வீரராக களமிறக்கியது. இந்த முடிவை கண்டு மைதானத்திலிருந்தவர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் விமர்சகர்களும் ஆச்சரியமடைந்தனர். ஆனால், தனக்கு கிடைத்த வாய்ப்பைச் சரியாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜுன், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
22 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் சேர்த்தார். இஷான் கடேகருடன் இணைந்து இன்னிங்ஸை தொடங்கிய அவர், இரண்டாவது விக்கெட்டுக்கு அபினவ் தேஜ்ரானாவுடன் இணைந்து 55 ரன்கள் பார்ட்னர்ஷி அமைத்து கொடுத்தார். இது கோவா அணிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தது. இறுதியில் அவர் முன்னாள் கேகேஆர் வீரர் ஷிவம் மாவியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சச்சினின் பாணி
சச்சின் டெண்டுல்கரும் தனது ஆரம்பக்கால ஒருநாள் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடினாலும், பின்னர் தொடக்க வீரராக களமிறங்கி சரித்திரம் படைத்தார். தற்போது அர்ஜுனும் அதே பாணியை பின்பற்றி, பந்துவீச்சாளராக இருந்து பேட்டிங் ஆல்-ரவுண்டராகவும், இப்போது தொடக்க வீரராகவும் தன்னை மெருகேற்றி வருகிறார். இதற்கு முன்பு கோவா அணிக்காக ரஞ்சி டிராபியில் சதமடித்து அசத்தியிருந்த அர்ஜுன், டி20 போட்டியிலும் பேட்டிங்கில் முத்திரை பதித்து வருவது லக்னோ அணிக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது. ஐபிஎல் 2025-ல் அவரை கூடுதல் பேட்டிங் திறனுள்ள வீரராக பயன்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும். கோவா அணி இந்த போட்டியில் 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. அர்ஜுனின் இந்த புதிய அவதாரம் வரும் போட்டிகளிலும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark