துபாய், குவைத், ஓமன், சிங்கப்பூர், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகம் முழுக்க பல நாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தமிழர்கள். பல்வேறு நாடுகளில் பல்வேறு வேலைப் பார்த்து, கஷ்டப்பட்டு உழைத்து, சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். வாங்கிய இடம் பத்திரமாக இருக்கும், விலையும் அதிகமாகும் என அவர்கள் நம்புவதால், ரியல் எஸ்டேட்டிலேயே அவர்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர்.
ஆனால், இந்தியா முழுக்கவுமே ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான சிந்தனை மிகவும் மாறிவிட்டது என்பதை இந்தியாவில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை.

இன்றைக்கு ஒருவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனில், குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை முதலீடு செய்ய வேண்டி இருக்கும்.
இந்த முதலீட்டை செய்து வீடாக வாங்கி இருக்கும்பட்சத்தில் அதற்கு வாடகையாகக் கிடைப்பது என்னவோ அதிகபட்சம் ரூ.50,000-தான். விலை ஏறும் என்கிற எதிர்பார்ப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரியல் எஸ்டேட் விலை முன்பு உயர்ந்தது போல இனியும் உயரும் என்று சொல்லும் நிலை இப்போது இல்லை. தவிர, ரியல் எஸ்டேட்டுகளின் விலையேற்றம் என்பது ஓவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மாதிரியாக இருப்பதால், நாம் எதிர்பார்க்கும் வருமானம் எதிர்காலத்தில் கிடைக்குமா என்கிற கேள்வி வருகிறது.

இந்த நிலையில், வெளிநாடு வாழ் தமிழர்கள் எந்த வகையில் தங்கள் முதலீடுகளை அமைத்துக்கொண்டால், ஓய்வுக் காலத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வகை வருமானம் பெற முடியும் என்பதை எடுத்துச் சொல்ல ‘லாபம்’ மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்டிரிபியூஷன் நிறுவனம் ஆன்லைன் மூலம் ஒரு சிறப்புக் கூட்டத்தை வருகிற ஏற்பாடு செய்கிறது.
இந்தக் கூட்டத்தில் வெளிநாடு வாழ் தமிழர்கள் தங்கள் ஓய்வுக் காலத்துக்குத் தேவையான பணத்தை எப்படிச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொல்ல விருக்கிறார் ஆதித்யா பிர்லா சன்லைன் லைப் ஏ.எம்.சி லிமிடெட் நிறுவனத்தின் ரீடெய்ல் சேல்ஸின் ரீஜினல் ஹெட் கே.சுவாமிநாதன்.

இந்தக் கூட்டமானது வருகிற 29-ஆம் தேதி அன்று மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை நடத்தப்பட விருக்கிறது. இந்த ஆன்லைன் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் எனில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகர்கள் பின்வரும் லிங்கினை சொடுக்கி, https://labham.money/webinar-nov-29-2025?utm_source=vikatan_com&utm_medium=article&utm_campaign=webinar_nov29_2025 தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்வது அவசியம்.
உங்கள் கவனத்துக்கு: ‘லாபம்’ என்பது ரெகுலர் ஃபண்ட் திட்டங்களை மட்டுமே முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் நிறுவனம் ஆகும். எனவே, டைரக்ட் ஃபண்ட் திட்டங்களில் மட்டும் முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ள வேண்டாம்!
ஆனால், ரெகுலர் ஃபண்ட் திட்டங்கள் மூலம் சரியான திட்டங்களில் முதலீடு செய்ய நினைக்கும் அனைத்து முதலீட்டாளர்களும் இந்த ஆன்லைன் மீட்டிங்கில் கலந்துகொண்டு, நல்ல லாபம் தரும் முதலீட்டு ஆலோசனைகளைப் பெறலாமே…!