WPL மெகா ஏலம் 2026: 5 அணிகளும் எடுத்த வீராங்கனைகள் யார் யார்? – முழு லிஸ்ட்

WPL 2026 Mega Auction: மகளிர் பிரீமியர் லீக் (Women’s Premier League – WPL) தொடர் 2026 வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் பிப்ரவரி 5ஆம் தேதிவரை நடைபெற இருக்கிறது. நவி மும்பை மற்றும் வதோதரா மைதானங்களில் இத்தொடர் நடைபெற இருக்கிறது.

Add Zee News as a Preferred Source

WPL 2026 Mega Auction: எத்தனை வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டார்கள்?

WPL 2026 தொடரை முன்னிட்டு மெகா ஏலம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்திய வீராங்கனைகள் மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் என மொத்தம் 250 வீராங்கனைகள் ஏலம்விடப்பட்டன. இதில் ஒவ்வொரு அணிகளும் 5 வீராங்கனைகளை மெகா ஏலத்திற்கு முன் தக்கவைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கடந்தாண்டு 2வது இடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 வீராங்கனைகளை தக்கவைத்தன.

WPL 2026 Mega Auction: 5 அணிகளின் பர்ஸ் தொகை

இந்த அணிகள் முறையே ரூ.5.75 கோடியுடனும், ரூ.5.7 கோடியுடனும் மெகா ஏலத்திற்கு வந்தது. தொடர்ந்து, குஜராத் அணி 2 வீராங்கனைகளை தக்கவைத்து ரூ.9 கோடியுடனும், ஆர்சிபி அணி 4 வீராங்கனைகளை தக்கவைத்து ரூ.6.15 கோடியுடனும், உ.பி., வாரியர்ஸ் அணி 1 வீராங்கனையை தக்கவைத்து ரூ.14.5 கோடியுடனும் ஏலத்திற்கு வந்தது. ஒரு அணி குறைந்தபட்சம் 15 வீராங்கனைகளையும், 18 வீராங்கனைகளையும் எடுத்துக்கொள்ளலாம். அதுவும் ஒரு அணியில் மொத்தம் 6 வெளிநாட்டு வீராங்கனைகளை மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். இன்று WPL மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணிகளும் யார் யாரை எடுத்தது என்பதை இங்கு காணலாம்.

WPL 2026 Mega Auction: மும்பை இந்தியன்ஸ்
அமெலியா கெர் – 3C
ஷப்னிம் இஸ்மாயில் – 40L
சமஸ்கிருதி குப்தா – 20L
சஜனா – 75L
ரஹிலா பிர்தௌஸ் – 10L
நிக்கோலா கேரி – 30L
பூனம் கெம்னார் – 10L
திரிவேணி வசிஸ்தா – 20L
நல்லா ரெட்டி – 10L
சைகா இஷாக் – 30L
மில்லி இல்லிங்வொர்த் – 10L
WPL 2026 Mega Auction: டெல்லி கேப்பிடல்ஸ்
லாரா வால்வார்ட் – 1.10C
சினெல்லே ஹென்றி – 1.30C
ஸ்ரீ சரணி – 1.30C
சினே ராணா – 50L
லிசெல் லீ – 30L
தீயா யாதவ் – 10L
தனியா பாட்டியா – 30L
மம்தா மடிவாலா – 10L
நந்தனி ஷர்மா – 20L
மின்னு மணி – 40L
WPL 2026 Mega Auction: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஜார்ஜியா வோல் – 60L
நாடின் டி கிளர்க் – 65L
ராதா யாதவ் – 65L
லாரன் பெல் – 90L
லின்சி ஸ்மித் 30L
பிரேமா ராவத் – 20L (RTM)
அருந்ததி ரெட்டி – 75L
பூஜா வஸ்த்ரகர் – 85L
கிரேஸ் ஹாரிஸ் – 75L
டி ஹேமலதா – 30L
கௌதமி நாயக் – 10L
பிரத்யுஷா குமார் – 10L
WPL 2026 Mega Auction: குஜராத் ஜெயன்ட்ஸ்
சோஃபி டெவின் – 2C
ரேணுகா சிங் – 60L
பார்தி ஃபுல்மாலி – 70L (RTM)
டைட்டாஸ் சாது – 30L
காஷ்வீ கௌதம் – 65L (RTM)
கனிகா அஹுஜா – 30L
தனுஜா கன்வர் – 45L
ஜார்ஜியா வேர்ஹாம் – 1C
அனுஷ்கா சர்மா – 45L
ஹேப்பி குமாரி – 10L
கிம் கார்த் – 50L
யாஸ்திகா பாட்டியா – 50L
ஷிவானி சிங் – 10L
ஆயுஷி சோனி – 30L
ராஜேஸ்வரி கயக்வாட் – 40L
டேனி வியாட்-ஹாட்ஜ் – 50L
WPL 2026 Mega Auction: உ.பி., வாரியர்ஸ்
தீப்தி ஷர்மா – 3.2C (RTM) —- அதிக தொகையில் எடுக்கப்பட்டவர்.
சோஃபி எக்லெஸ்டோன் – 85L (RTM)
மெக் லானிங் – 1.90C
ஃபோப் லிட்ச்ஃபீல்ட் – 1.2C
கிரண் நவ்கிரே – 60L (RTM)
ஹர்லீன் தியோல் – 50L
கிராந்தி கவுட் – 50L (RTM)
ஆஷா சோபனா – 1.10C
டியாண்ட்ரா டாட்டின் – 80L
ஷிகா பாண்டே – 2.4C
ஷிப்ரா கிரி – 10L
சிம்ரன் ஷேக் – 10L
தாரா நோரிஸ் – 10L
க்ளோ ட்ரையான் – 30L
சுமன் மீனா – 10L
பிரதிகா ராவல் – 50L
ஜி த்ரிஷா – 10L

மேலும் படிக்க | கோடிகளை கொட்டிய மும்பை இந்தியன்ஸ்… சூப்பர் கிங்ஸின் பொக்கிஷம் – யார் இந்த ஜி. கமலினி?

மேலும் படிக்க | 36 வயது வீரருக்கு மினி ஏலத்தில் ‘செம மவுஸ்’ – CSK உள்பட 3 அணிகள் நிச்சயம் சுத்துப்போடும்!

மேலும் படிக்க | சஞ்சு சாம்சன் இல்லாமலே பலமாக இருக்கும் RR… மினி ஏலத்தில் யார் யாரை குறிவைக்கும்?

About the Author


Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.