மும்பை இந்தியன்ஸின் மாஸ்டர் பிளான்! டார்கெட் செய்யும் 5 முக்கிய வீரர்கள்!

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, 2026-ம் ஆண்டு ஐபிஎல் மினி ஏலத்திற்கு மிக குறைவான கையிருப்பு தொகையுடன் தயாராகி வருகிறது. வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில், மும்பை அணியின் வியூகம் என்னவாக இருக்கும் என்பது குறித்த சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட 20 நட்சத்திர வீரர்களை ஏற்கனவே தக்கவைத்துள்ளது. இதனால் அந்த அணியின் பெரும் பகுதி பட்ஜெட் காலியாகிவிட்டது. 

Add Zee News as a Preferred Source

தற்போது அணியின் கையில் மீதமுள்ளது வெறும் ரூ. 2.75 கோடி மட்டுமே. இந்தச் சிறிய தொகையை வைத்துக்கொண்டு, அணியில் காலியாக உள்ள 5 இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி உள்ளது. எனவே, பெரிய விலை கொடுத்து ஸ்டார் வீரர்களை வாங்குவது சாத்தியமில்லை. அதற்கு பதிலாக, ஸ்மார்ட் பிக் முறையில் குறைந்த விலைக்கு கிடைக்கும் திறமையான வீரர்களை குறிவைக்க திட்டமிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் குறிவைக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள்!

ஜானி பேர்ஸ்டோ (Jonny Bairstow)

இங்கிலாந்தின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜானி பேர்ஸ்டோ, மும்பை இந்தியன்ஸின் முக்கிய இலக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறார். ஏற்கனவே அணியில் ரியான் ரிக்கல்டன் போன்ற விக்கெட் கீப்பர்கள் இருந்தாலும், ஒரு அனுபவமிக்க வெளிநாட்டு மாற்று வீரராக பேர்ஸ்டோவை மும்பை பார்க்கிறது. சமீபத்திய ஃபார்ம் காரணமாக அவரது மவுசு சற்று குறைந்திருக்கலாம் என்பதால், அடிப்படை விலையிலோ அல்லது குறைவான விலையிலோ அவர் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு மாற்று வீரராக சில போட்டிகளில் விளையாடி இருந்தார்.

குிண்டன் டி காக் (Quinton de Kock)

மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர் குிண்டன் டி காக். கடந்த காலங்களில் மும்பை அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர். தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த இவர், லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரையும் விக்கெட் கீப்பர் மற்றும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் இடத்திற்கான ஒரு சிறந்த தேர்வாக மும்பை அணி நிர்வாகம் கருதுகிறது. இவரும் பட்ஜெட்டிற்குள் கிடைத்தால் மும்பை நிச்சயம் முயற்சிக்கும்.

ஜெரால்ட் கோட்ஸி (Gerald Coetzee)

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி. காயம் மற்றும் ஃபார்ம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவரை மீண்டும் அணிக்குள் கொண்டு வர மும்பை ஆர்வமாக உள்ளது. வான்கடே மைதானத்தின் ஆடுகள தன்மைக்கு இவரது வேகம் கைகொடுக்கும். அணியில் மீதமுள்ள ஒரு வெளிநாட்டு வீரருக்கான இடத்தில், இவரை மீண்டும் குறைந்த விலைக்கு ஏலத்தில் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

விக்னேஷ் புத்தூர் (Vignesh Puthur)

உள்ளூர் திறமைகளை தேடிப்பிடிப்பதில் மும்பை இந்தியன்ஸ் எப்போதுமே கில்லாடி. அந்த வகையில், கேரளாவை சேர்ந்த இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான விக்னேஷ் புத்தூரை மும்பை குறிவைத்துள்ளது. இவர் சமீபத்திய உள்நாட்டு தொடர்களில் மற்றும் 2025 ஐபிஎல் சீசனில் தனது சிறப்பான பந்துவீச்சு மூலம் கவனத்தை ஈர்த்தவர். மும்பையின் சுழற்பந்து வீச்சுத் துறையை வலுப்படுத்த இவர் ஒரு சிறந்த மற்றும் சிக்கனமான தேர்வாக இருப்பார்.

ஆகிப் நபி (Aquib Nabi)

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி, மும்பை இந்தியன்ஸின் ஐந்தாவது இலக்காக பார்க்கப்படுகிறார். உள்ளூர் போட்டிகளில் பந்துவீச்சிலும், கீழ் வரிசை பேட்டிங்கிலும் அசத்தி வரும் இவரை, ஒரு ஆல்ரவுண்டர் பேக்கேஜாக மும்பை அணி நிர்வாகம் பார்க்கிறது. குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளராக இவர் இருப்பார் எனக் கணிக்கப்படுகிறது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் – @ZEETamilNews

ட்விட்டர் – @ZeeTamilNews

டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.