IPL 2026: 2013ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல்லில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன் 2026, 2017ஆம் ஆண்டில் மட்டும்தான் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். மற்ற சீசன்கள் அனைத்திலுமே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகதான் விளையாடி இருக்கிறார். அந்த அணிக்காக கிட்டத்தட்ட 150 போட்டிகளில் விளையாடி உள்ள அவர், 4000 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறார். பல ஆண்டுகளாக அந்த அணிக்காக விளையாடி வந்த அவரை 2021ஆம் ஆண்டு கேப்டனாக நியமித்தனர். கிட்டத்தட்ட அந்த அணியின் பிராண்டாக அவர் மாறி பெரும் ரசிகர் பட்டாளத்திற்கு சொந்தக்காரர் ஆனார்.
Add Zee News as a Preferred Source
Sanju Samson: 11 ஆண்டுகள் இல்லாத மனகசப்பு
இந்த சூழலில், கடந்த ஐபிஎல் சீசனின் போது, இத்தனை ஆண்டுகள் இல்லாத மனகசப்பு ஏற்பட்டு அந்த அணியில் இருந்து வெளியேறும் அளவிற்கு விளைவுகள் மாறன. அவர் வெளியேறுகிறார் என்று தெரிந்தவுடன் மற்ற ஐபிஎல் அணிகள் அவருக்காக பேச்சுவார்த்தை நடத்தின. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேச்சுவார்த்தை வெற்றிபெற்று, தோனிக்கு அடுத்தபடியான ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை வாங்கிக்கொண்டது சிஎஸ்கே அணி. இதற்கு அவர்கள் ஜடேஜா என்ற பெரிய சொத்தை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது. நிர்வாகம் அணியின் எதிர்காலத்தை யோசித்து ஜடேஜாவை விட்டுக்கொடுக்க தயாராகி அந்த அணிக்கு டிரேட் செய்தது.
Rajasthan Royals In 2026 IPL: தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் RR அணி
இந்த நிலையில், சஞ்சு சாம்சன் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அந்த அணியின் ரசிகரள் எப்படி பார்ப்பது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அடுத்த ஆண்டில் இருந்து அந்த அணியை புதிய கேப்டன் வழிநடத்தப்போகிறார். அது ஜெய்ஸ்வால் அல்லது ரியான் பராக்காக இருக்கும் என கூறப்படுகிறது. இருப்பினும் அனுபவம் வாய்ந்த சஞ்சு சாம்சன் இல்லாமல் அந்த அணி இளம் வீரர்களால் சூழ்ந்த ஒரு படையாக மாறி இருக்கிறது. அவர்கள் தங்களை அடுத்த சீசனில் நிரூபிக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். அப்போதுதான் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பாதுகாத்துக்கொள்ள முடியும்.
RR Retained Players: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்துக்கொண்ட வீரரகள்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தங்கள் அணியில் சிபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ், ஷிம்ரோன் ஹெட்மியர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ரியான் பராக், யுத்வீர் சிங் சரக், ஜோஃப்ரா ஆர்ச்சர், துஷார் தேஷ்பாண்டே, குவேனா மபாகா, நந்த்ரே பர்கர் ஆகியோரை தக்கவைத்துக்கொண்டது. வர்த்தகம் செய்யப்பட்டவர்கள்: ரவீந்திர ஜடேஜா (CSK-லிருந்து), சாம் கரன் (CSK-லிருந்து), டொனோவன் ஃபெரீரா (DC-லிருந்து) டிரேட் மூலம் வாங்கிக்கொண்டது.
Rajasthan Royals IPL Mini Auction Purchase: மினி ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்
ஐபிஎல் மினி ஏலத்தில் ரவி பிஷ்னோய் (ரூ. 7.20 கோடி), ரவி சிங் (ரூ. 95 லட்சம்), சுஷாந்த் மிஸ்ரா (ரூ. 90 லட்சம்), விக்னேஷ் புதூர் (ரூ. 30 லட்சம்), யாஷ் ராஜ் புஞ்சா (ரூ. 30 லட்சம்), அமன் ராவ் (ரூ. 30 லட்சம்), பிரிஜேஷ் சர்மா (ரூ. 30 லட்சம்), குல்தீப் சென் (ரூ. 75 லட்சம்), ஆடம் மில்னே (ரூ. 2.40 லட்சம்) ஆகியோரை வாங்கியது.
Rajasthan Royals Best Playing XI For IPL 2026: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெஸ்ட் பிளேயிங் 11
யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, ரியான் பராக், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), சிபம் துபே, டெவோனன் ஃபெரியரா, ஷிம்ரோன் ஹெட்மியர், சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே அல்லது யுத்வீர் சிங் அல்லது குல்தீப் சென்.
About the Author
R Balaji