சர்பராஸ் கான் வேஸ்ட்… CSK இந்த 3 வீரர்களில் ஒருவரை எடுத்திருக்கலாம் – யாரெல்லாம் தெரியுமா?

Chennai Super Kings: வரும் ஐபிஎல்லின் 19வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், அதற்கு முன்பாக ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான அணிகளை எடுத்திருந்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்பராஸ் கானுக்கு பதிலாக வேறு வீரர்களை எடுத்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.

Add Zee News as a Preferred Source

2026 IPL Mini Auction: ஐபிஎல் மினி ஏலம்

கடந்த டிசம்பர் 16ஆம் தேதி 2026 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தின்போது சில வீரரக்ள் விலைபோகாமல் இருந்தனர். அல்சாரி ஜோசப், கஸ் அட்கின்சன், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்பென்சர் ஜான்சன் என பலரும் எந்த அணியாலும் வாங்கப்படாமல் இருந்தனர். இறுதி நேரத்தில் சில வீரர்கள் அடிப்படை விலைக்கு ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்பராஸ் கானை ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியது. இதன் மூலம் சர்பராஸ் கான் 3 சீசனுக்கு பின்னர் மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி உள்ளார்.

Sarfaraz Khan: சர்பராஸ் கான் செயல்பாடு

வலது கை பேட்டரான இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்ததற்கு காரணம், 2025 சையத் முஷ்டாக் அலி டிராபியின் போது அவர் கொண்டிருந்த அபாரமான ஃபார்ம் தான். 7 இன்னிங்ஸ்களில் 65.80 சராசரி மற்றும் 203.39 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 329 ரன்கள் எடுத்தார். இருப்பினும், சிஎஸ்கே அணியின் காம்பினேஷனை கருத்தில் கொண்டு சர்பராஸ் கானுக்கு பதிலாக வேறு 3 வீரர்களில் ஒருவரை அணிக்குள் கொண்டு வந்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.

அபினவ் மனோகர் (Abhinav Manohar)

கடந்த சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவர் தனது முழு தறமையையும் வெளிப்படுத்த தவறிவிட்டார். இருப்பினும் அவரது பந்து வீச்சு அவரை ஐபிஎல் மினி ஏலத்தில் நல்ல ஏலத் தொகையை பெற்று தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அபினவ் மனோகர் ரூ. 30 லட்சம் என்ற அடிப்படை தொகையில் அறிவிக்கப்பட்டபோது, எந்த அணியும் அவரை வாங்க முன் வரவில்லை.

குறிப்பாக சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் வெளியேறிய பிறகு, அபினவ் மனோகரின் சேவைகளை பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் சையத் முஷ்டாக் அலி டிராபில் அபினவ் மனோகர் ஏமாற்றம் அளித்ததால், அவரை எடுக்க வேண்டாம் என சிஎஸ்கே முடிவு செய்திருக்கலாம்.

மஹிபால் லோம்ரோர் (Mahipal Lomror)

26 வயதான மஹிபால் லோம்ரோர் டெல்லி, ராஜஸ்தான், பெங்களூரு, குஜராத் என நான்கு ஐபிஎல் அணிகளை பிரநிதித்துவப்படுத்தி உள்ளார். ஆல் ரவுண்டரான இவரை சிஎஸ்கே அணி கருத்தி கொண்டிருக்கலாம். ஜடேஜாவை போல் 4 ஓவர்களை வீசாவிட்டாலும், ஓரிரு ஓவர்கள் வீச வைத்து பேட்டிங்கிலும் விளையாட வைத்திருக்கலாம். ஆனால் சிஎஸ்கே உட்பட எந்த அணியும் இவரை வாங்க முன் வரவில்லை. இதுவரை 40 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 527 ரன்களை அடித்துள்ளார்.

பிரித்வி ஷா (Prithvi Shaw)

அதிரடிக்கு பெயர்போன பிரித்வி ஷாவும் இந்த 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ஏலம்போகாமல் இருந்தார். இறுதியில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியது. ஆனால் இந்த வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது. சிஎஸே அணி சஞ்சு சாம்சனுடன் சேர்ந்து பிரித்வி ஷாவை ஒரு அற்புதமான தொடக்க ஜோடியாக உருவாக்கி இருந்திருக்கலாம். இருப்பினும் கடந்த சீசனில் ஆயுஷ் மாத்ரே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால், சிஎஸ்கே அணி பிரித்வி ஷாவை எடுக்க முன் வரவில்லை. 

About the Author


R Balaji

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.