2026 ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது அதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அத்தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று முடிந்தது. இதில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்துக்கொண்டது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் எலத்தில் தங்களுக்கு தேவையான வீரர்களை எடுத்தது.
Add Zee News as a Preferred Source
KKR Removed Venkatesh Iyer: வெங்கடேஷ் ஐயரை கழற்டிவிட்ட கேகேஆர் அணி
இந்த மினி ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ. 7 கோடிக்கு வாங்கியது. வெங்கடேஷ் ஐயர் கடந்த ஐபிஎலில் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வ்ந்த நிலையில், அவர் அந்த அணியில் இருந்து கழற்டிவிடப்பட்டார். 2025 ஐபிஎல்லுக்கு முன்பாக நடந்த மெகா ஏலத்தில் ரூ. 23 கோடிக்கு வாங்கப்பட்ட அவர், சரியான செயல்திறனை வெளிப்படுத்த தவறியதால் அவர் கேகேஆர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
RCB Buys Venkatesh Iyer: வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி அணி
இந்த சூழலில்தான் அவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வாங்கி உள்ளது. ஆல்-ரவுண்டராக கருதப்படும் அவர் நிச்சயம் ஆர்சிபி அணியில் பிளேயிங் 11ல் இடம் பிடிப்பார் என ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிலையில், 2026 ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் வெங்கடேஷ் ஐயர் இடம் பிடிக்க வாய்ப்பில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
Royal Challengers Bengaluru: ஆர்சிபி பிளேயிங் 11ல் இடம் இல்லை
இது தொடர்பாக ஜியோ ஹாட்ஸ்டாரில் பேசிய அவர், வரும் 2026 ஐபிஎல் தொடரின் தொடக்கத்தின் சில போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பிளேயிங் 11ல் வெங்கடேஷ் ஐயர் இடம் பெற மாட்டார். சாம்பியனான ஆர்சிபி அணியின் மீது சந்தேகத்தை உருவாக்க யாரும் விருப்பப்பட மாட்டார்கள். அதன் காரணமாகவே, முக்கிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஏலத்தில் வந்தபோதும், சூயாஷ் சர்மா அணியில் தொடர்கிறார்.
ஆர்சிபி அணியில் வெங்கடேஷ் ஐயர் இணைந்துள்ளது அந்த அணிக்கு மகிழ்ச்சியே. தற்போது புது வீரர்கள் அந்த அணியில் இணைந்துள்ளனர். இது அந்த அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
RCB Released Players: ஆர்சிபி அணி விடுவித்த வீரர்கள்
ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், லியாம் லிவிங்ஸ்டோன், மனோஜ் பந்தகே, லுங்கி என்கிடி, மோஹித் ரதி.
RCB Retained Players: ஆர்சிபி அணி தக்கவைத்துக்கொண்ட வீரர்கள்
ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரசிக் சிங், அபிநந்தன் ஷர்மா, அபிநந்தன் ஷர்மா.
Players Bought By RCB In The Mini Auction: ஆர்சிபி அணி மினி ஏலத்தில் வாங்கிய வீரர்கள்
வெங்கடேஷ் ஐயர் (ரூ 7 கோடி), ஜேக்கப் டஃபி (ரூ 2 கோடி), சாத்விக் தேஸ்வால் (ரூ 30 லட்சம்), மங்கேஷ் யாதவ் (ரூ 5.2 கோடி), ஜோர்டான் காக்ஸ் (ரூ. 75 லட்சம்), விக்கி ஓஸ்ட்வால் (ரூ 30 லட்சம்), விஹான் மல்ஹோத்ரா (ரூ 30 லட்சம்), கனிஷ்க் சவுகான் (ரூ 30 லட்சம்) என மொத்தம் 8ம் வீரர்களை எலத்தில் வாங்கினர்.
About the Author
R Balaji