இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதய துடிப்பாக இருந்து வரும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ரசிகர்களின் மனதில் ஆளும் நட்சத்திரமாக திகழ்கிறார். இந்நிலையில், முன்னாள் இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்ட உணர்ச்சிமயமான பதிவு மூலம் கோலியை டெஸ்ட் அணிக்கு திரும்ப அழைக்க வேண்டும் என்று கடவுளிடம் ஒரே ஆசையாக கூறியுள்ளார். “கோலியின் உடல் நலனும், ஃபார்மும் 20 வயது சிறுவனை போன்றவை” என்று பாராட்டிய சித்து, அவர் மீண்டும் டெஸ்ட் அணிக்கு வருவது நாடு முழுவதும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.
Add Zee News as a Preferred Source

சித்துவின் இன்ஸ்டாகிராம் பதிவு
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட சித்து, “கடவுள் எனக்கு ஒரு ஆசை அளித்தால், கோலியை டெஸ்ட் ஓய்விலிருந்து திரும்ப அழைத்து, அவரை மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைக்க சொல்வேன். 1.5 பில்லியன் மக்கள் வாழும் நாட்டுக்கு இதைவிட சுகமும், மகிழ்ச்சியும் வேறில்லை! அவரது உடல் 20 வயது இளைஞரை போன்றது – கோலி 24 காரட் தங்கம்” என்று உணர்ச்சியுடன் எழுதியுள்ளார். இந்த பதிவு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலியின் ஓய்வு முடிவுகள்
2025 மே 12 அன்று விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான பக்கங்களில் ஒன்றாக அமைந்தது. அதற்கு முன்னதாகவே, 2024ல் பார்படோஸில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பிறகு டி20 அணியிலிருந்தும் அவர் விலகியிருந்தார். இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருகிறார். கோலியின் டெஸ்ட் பயணம் இந்தியாவுக்கு அளவில்லா பெருமைகளை தந்தது. ஆனால், ஓய்வுக்கு பிறகும் அவரது ஆர்வமும், உடல் தகுதியும் குறையவில்லை என்பதை சமீபத்திய சாதனைகள் நிரூபிக்கின்றன.

சமீபத்திய சூப்பர் ஃபார்ம்
ஒருநாள் போட்டிகளில் கோலி தொடர்ந்து சிறப்பாக திகழ்கிறார். மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் சிறு தடுமாற்றம் ஏற்பட்டது. முதல் இரண்டு போட்டிகளில் டக்அவுட் அடைந்தார். இது அவரது சர்வதேச வாழ்க்கையில் முதல் முறை. ஆனால், மூன்றாவது போட்டியில் சிட்னியில் 74 நன் அவுட்டுடன் அசத்தினார். ரோஹித் சர்மாவின் சதத்துடன் இந்தியா வெற்றிகரமாக டார்கெட்டை விரட்டியது. அதன் தொடர்ச்சியாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் சதங்கள் அடித்தார். மூன்றாவது போட்டியில் 65 நன் அவுட்டுடன் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று கொடுத்தார். இந்த ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் 651 ரன்கள் அடித்து, சராசரி 65.10 என்ற சிறப்பம்சத்துடன் ஆண்டை முடித்தார்.
உள்நாட்டு கிரிக்கெட்டிலும் அசத்தல்
டெஸ்ட் ஓய்வுக்கு பிறகு கோலி உள்நாட்டு போட்டிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லிக்காக விளையாடி, ஒரு சதம் மற்றும் 77 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இது அவரது உடல் தகுதியும், போட்டி ஆர்வமும் ஓய்வுக்கு முன்பு போன்றவை என்பதை உறுதிப்படுத்துகிறது. ஜனவரி 11 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக கோலி தயாராகி வருகிறார். சித்துவின் ஆசை குறியீடாக இருந்தாலும், ரசிகர்கள் இன்னும் கோலியின் டெஸ்ட் திரும்பி வருதலை விரும்புகின்றனர். அவரது அனுபவமும், தலைமைத்துவமும் இந்திய அணிக்கு இன்றும் அவசியம் என்கின்றனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் – @ZEETamilNews
ட்விட்டர் – @ZeeTamilNews
டெலிக்ராம் – https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் – https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
About the Author
RK Spark