Rohit Sharma: தற்போது 355 ஒருநாள் போட்டி சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஹித், 400 சிக்ஸர்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவரால் எட்ட முடியும்.
Add Zee News as a Preferred Source
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 2025ல் ஒருநாள் கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். கடைசியாக விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 75 ரன்கள் எடுத்து கடந்த ஆண்டை வெற்றிகரகாம முடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஒருநாள் தொடரில் மட்டுமே விளையாடும் ரோஹித் சர்மா 2026ம் ஆண்டு பல்வேறு சாதனைகளை எட்ட உள்ளார். தற்போது 11,516 ரன்களுடன் ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில், 9வது இடத்தில் உள்ளார் ரோஹித். 12,000 ரன்களை எட்ட ரோஹித் சர்மாவிற்கு இன்னும் வெறும் 484 ரன்கள் மட்டுமே தேவை. நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடர்கள் உட்பட 2026ல் குறைந்தபட்சம் 18 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளதால், இந்த சாதனையை எளிதாக அடைய முடியும். இந்த சாதனையை அடையும் பட்சத்தில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை எட்டும் 6வது வீரர் ஆவார்.

ஒருநாள் போட்டி சிக்ஸர்கள்
தற்போது 355 ஒருநாள் போட்டி சிக்ஸர்களுடன் முதலிடத்தில் உள்ள ரோஹித், 400 சிக்ஸர்களை எட்டும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் வரலாற்றில் யாரும் செய்ய முடியாத சாதனையை அவரால் எட்ட முடியும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில், ராஞ்சியில் நடந்த முதல் போட்டியின் போது ஷாஹித் அஃப்ரிடியின் 15 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா. 2013ல் பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒருநாள் போட்டியில் 16 சிக்ஸர்கள் அடித்து தனது சிக்ஸர் அடிக்கும் திறனை வெளிப்படுத்தி இருந்தார் ரோஹித். அப்போதிருந்து 27.35 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் என்ற சராசரியை பராமரித்து வருகிறார்.
அரைசதங்கள்
தற்போது 94 அரைசதங்கள் (சதங்கள் உட்பட) அடித்துள்ள ரோஹித், 2026ல் மேலும் 6 அரைசதம் அடித்தால் 100 என்ற சாதனை நம்பரை அடைய முடியும். இதனை செய்யும் பட்சத்தில் உலகளவில் 6வது வீரராக ரோஹித் சர்மா இருப்பார். ராகுல் ட்ராவிட், சனத் ஜெயசூர்யா மற்றும் மகேலா ஜெயவர்த்தனே ஆகியோரையும் முந்துவார். சமீபத்திய போட்டியில் சிறப்பான ஃபார்மில் உள்ள ரோஹித் சர்மா, 2025ல் 14 இன்னிங்ஸ்களில் 650 ரன்கள் அடித்துள்ளார். மேலும் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ரோஹித், எட்டாவது இடத்தில் உள்ள ஜாக்குஸ் கலிஸை (11,579 ரன்கள்) முந்த வெறும் 224 ரன்கள் மட்டுமே தேவை. அதே போல இன்ஸமாம்-உல்-ஹக்கை (11,739 ரன்கள்) முந்தவும் வாய்ப்பு உள்ளது.

சர்வதேச சதங்கள்
தற்போது 50 சர்வதேச சதங்கள் நடித்துள்ள ரோஹித், 2026ல் ஐந்து சதங்கள் அடித்தால் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹாஷிம் அம்லாவின் சாதனையை சமன் செய்வார். மேலும் பிரையன் லாரா மற்றும் மகேலா ஜெயவர்த்தனே போன்ற தலைசிறந்த வீரர்களையும் முந்த உதவும். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு டி20யில் இருந்தும், மே 2025ல் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்ற ரோஹித், இப்போது ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரில் மோசமான செயல்பாட்டிற்கு பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். 2027ல் நடைபெறும் ஒருநாள் உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடி வருகிறார்.
About the Author
RK Spark