Bigg Boss Tamil 9: பணத்தேவை, மனச்சோர்வு – வினோத் பணப்பெட்டியை எடுத்து வெளியேறியது ஏன்?

பணப்பெட்டி டாஸ்க் மூலம் பணத்தை எடுத்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கானா வினோத் வெளியேறியதால் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.

இந்த சீசனில் டைட்டில் வெல்ல வாய்ப்புள்ளவர் என எதிர்பார்க்கப் பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் கானா வினோத்.

வடசென்னை பகுதியைச் சேர்ந்த இவர் விஜய் டிவிக்கு ஏற்கனவே பரிச்சயமானவர்தான். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் முந்தைய சில பிக்பாஸ் நிகழ்ச்சிகளின் நிறைவு நாள் கொண்டாடங்களின் போது கானா பாட்டு பாடியிருக்கிறார்.

அந்த தொடர்பில்தான் பிக்பாஸ் வாய்ப்பு வந்ததாகத் தெரிகிறது.

கானா வினோத்
கானா வினோத்துடன் மன்னர் முத்து

நிகழ்ச்சியிலும் ஒருசில சர்ச்சைகளைத் தாண்டி தனித்து விளையாடினார் என்று சொல்லலாம். அதனாலேயே ஒவ்வொரு எவிக்‌ஷனின் போதும் இவருக்கு ஓட்டுகள் கிடைத்து எவிக்ட் ஆகாமல் தப்பித்து வந்தார். வெளியில் பி.ஆர் ஒர்க் என்றெல்லாம் எதுவும் இவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

கமருதீன்

 ‘சாதாரண குடும்பப் பின்னணி. கானா கச்சேரிகள் மூலம் கிடைக்கிற வருமானம் பத்தாதுனுதான் அவங்க மனைவி சின்னதா பியூட்டி பார்லர் வச்சிருக்காங்க. அவருக்கு ஆதரவு தெரிவிச்சதெல்லம் அவரு கூட இருந்த பசங்கதான். வடசென்னை பின்புலத்துல இருந்து அந்த மாதிரி ஒரு ஷோவுல கலந்துகிட்டு 90 நாட்களைக் கடந்த்தே பெரிய சாதனைதான். பணப்பெட்டி எடுத்த பிறகு ஒரு விஷயத்தை ஓபனா சொல்லியிருந்தாரே, ‘இந்தப் பணம் கோடிக்குச் சமம்’னு அதுதான் நிஜம். அதுவும் போக அந்த ஷோவுல டைட்டில் வாங்கினா 50 லட்சம் தர்றவங்க ரெண்டாவது இடத்துக்கு எதுவுமே தர்றதில்ல, இதையெல்லாம் யோசிச்சுதான் பணத்தை எடுத்திருப்பார். ரொம்ப நல்ல முடிவும் கூட’ என்கிறார் வினோத்தை அவர் கானா பாட ஆரம்பித்த காலத்திலிருந்து அறிந்து தெரிந்து வைத்திருக்கும் வடசென்னை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8

வினோத்தின் நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசிய போது,

‘நம்பிக்கையோடதான் விளையாடிட்டிருந்தான். டைட்டில் கிடைச்சிடும்னு நம்பினோம். ஆனா பணத்தை எடுக்கிற முடிவை கடைசி நிமிடத்துலதான் எடுத்திருக்கணும். ஏன்னா, ஷோவுக்கு போறதுக்கு முன் ‘முடிஞ்ச எஃபெக்ட் போடுவோம், பார்த்துக்கலாம்’னு உற்சாகமாப் போனான் ஷோவுல கமருதீனுக்கு நிகழ்ந்த அனுபவம் ரொம்பவே பாதிச்சிடுச்சு. ஷோவுல எது வேண்டுமானாலும் நடக்கலாம்னு கடைசி சில நாட்கள்ல புரிஞ்சிருக்கு. அதனாலேயே பணத்தை எடுத்துட்டு வெளியேறிட்டார்’ என்கின்றனர் இவர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.