இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று தொடங்குகிறது. ஒரு நாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியுள்ள நிலையில் அனைவரது பார்வையும் தற்போது டி20 தொடரின் மீது தான் உள்ளது. இந்நிலையில் ஒரு நாள் தொடரில் நியூசிலாந்து அணியை வழிநடத்திய, கேப்டனும் ஆல் ரவுண்டருமான மைக்கேல் பிரேஸ்வெல் காயம் காரணமாக முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து விலகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதில் வேகப்பந்துவீச்சாளர் கிறிஸ்டியன் கிளார்க் நியூசிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
Michael Bracewell joins Black Caps in Nagpur despite minor calf strain from Indore ODI. Treatment underway—full recovery or sidelined? Squad depth tested! pic.twitter.com/hdGPVNSBUZ
— The sports (@the_sports_x) January 20, 2026
மைக்கேல் பிரேஸ்வெல் காயம்
இந்தூரில் நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல்க்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மைதானத்திலும் இல்லை. டேரி மிச்சல் தான் கேப்டன்சியை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் காயம் இன்னும் சரி ஆகவில்லை என்பதால், இன்று நாக்பூரில் தொடங்கும் முதல் டி20 போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம் டி20 உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல் பங்கு அணிக்கு முக்கியம் என்பதால், அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மைக்கேல் பிரேஸ்வெல் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும், முதல் மூன்று டி20 போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்றும், அதன் பிறகு அவரது காயத்தை பொறுத்து மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் அவர் விளையாடுவது முடிவெடுக்கப்படும் என்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
மாற்று வீரர் யார்?
மைக்கேல் பிரேஸ்வெல்க்கு மாற்று வீரராக நியூசிலாந்து அணியில் கிறிஸ்டியன் கிளார்க் சேர்க்கப்பட்டுள்ளார். இளம் வீரர் என்றாலும் ஒரு நாள் தொடரில் தனது பந்து வீச்சு மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இருந்தார். குறிப்பாக விராட் கோலியின் விக்கெட்டை இரண்டு முறை இந்த தொடரில் வீழ்த்தி இருந்தார். வெறும் 24 வயது ஆகும் கிறிஸ்டியன் கிளார்க் பேட்டிங் மட்டும் இன்றி, பந்துவீச்சில் பங்களிக்க முடியும். ஒரு நாள் தொடரில் தனது ஆல் ரவுண்டர் பெர்பாமென்ஸை காட்டியதன் மூலம் டி20 தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. “முதல் மூன்று டி20 போட்டிகளுக்கு எங்களுக்கு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் தேவை. அதனை கிறிஸ்டியன் கிளார்க் சரி செய்வார்” என்று நியூசிலாந்தின் தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியிலும் காயம்
நியூசிலாந்து அணியை போலவே இந்திய அணியிடம் காயம் காரணமாக திலக் வர்மா, முதல் மூன்று டி20 போட்டியில் இருந்து விலகி உள்ளார். அவருக்கு வயிற்றில் பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பெற்றுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் இன்று முதல தொடங்குகிறது. டி20 உலக கோப்பை அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில் இந்த தொடர் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (வி.கீ.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரின்கு சிங்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி
மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவோன் கான்வே (வி.கீ), ஜேக்கப் டஃபி, சாக் ஃபௌல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திர, டிம் ராபின்சன், இஷ் சோதி, கிறிஸ்டியன் கிளார்க்.
About the Author
RK Spark