இன்று நடைபெறும் 3வது டி20: நியூஸிலாந்திற்கு வெற்றி வாய்ப்பு! ஏன் தெரியுமா?

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 இன்று கவுகாத்தியில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம். ராய்ப்பூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் என்ற இமாலய இலக்கை வெறும் 15 ஓவர்களில் சேஸ் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சிறந்த பார்மிலும் இருந்து வருகின்றனர். குறிப்பாக இஷான் கிஷன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

Add Zee News as a Preferred Source

சஞ்சு சாம்சன் ஏமாற்றம் 

அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷன், கேப்டன் சூர்யா குமார், ரிங்கு சிங் என அனைவரும் நல்ல பார்மில் இருந்து வரும் நிலையில், சஞ்சு சாம்சன் மட்டும் ரன்கள் அடிக்கவில்லை. முதல் போட்டியில் 10 ரன்களும், இரண்டாவது போட்டியில் 6 ரன்களுக்கும் ஆட்டம் இழந்து வெளியேறினார். நான்காவது டி20 போட்டியில் திலக் வர்மா அணிக்குள் வந்துவிடுவார் என்பதால், சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் ரன்கள் அடித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் சஞ்சு சாம்சன் உள்ளார். ஒரு வேலை அவர் ரன்கள் அடிக்கவில்லை என்றால் இஷான் கிஷன் ஓப்பனிங் வீரராகவும், திலக் வர்மா 3வது இடத்தில் இறங்கவும் அதிக வாய்ப்புள்ளது. 

Fearless intent 
Clarity of mind 
Flawless execution 

Reflecting on a commanding partnership ft. Captain Surya Kumar Yadav & Ishan Kishan  – By @RajalArora #TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank | @surya_14kumar | @ishankishan51 https://t.co/UkajUNlFHG

— BCCI (@BCCI) January 24, 2026

பும்ரா விளையாடுவாரா?

கடந்த போட்டியில் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்பட்டது. இன்றைய போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் அர்ஸ்தீப் சிங்கிற்கு ஓய்வு வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. காரணம் அவர் ஒரு நாள் தொடர் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். பும்ரா மற்றும் ஹர்ஷித் ராணா காம்பினேஷன் எப்படி ஒர்க் ஆகிறது என்பதை சோதித்து பார்க்கவும் இந்த போட்டி உதவும். மேலும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டி20 போட்டியில் விளையாடாத அக்சர் படேல், இன்று காயம் சரியாகிவிட்டால் அணியில் விளையாடுவார். அப்படி இல்லாவிட்டால் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு வழங்கப்படும். 

நியூசிலாந்த அணி 

ஒரு நாள் தொடரில் வெற்றி பெற்றிருந்தாலும் டி20 தொடரில், நியூசிலாந்து அணியால் இந்தியாவிற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அடுத்த மாதம் உலகக் கோப்பை வரும் நிலையில் இந்த தொடரை வெற்றி பெறுவது அவர்களுக்கு கூடுதல் பலத்தை அளிக்கும். இன்றைய போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டி, கடும்  பயிற்சிகளில் நியூசிலாந்தின் ஈடுபட்டு வருகிறது. டாஸ் வென்றால் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து முதலில் பந்து வீசினால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது.

இந்திய உத்தேச அணி

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் பட்டேல்/ரவி பிஸ்னாய், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.