புதுச்சேரி: கழிப்பறைக்குச் சென்றிருந்த பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி, அவர் அணிந்திருந்த 6 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. இது பொதுமக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்கத்தின் விலையால், தக்க நகை அணியவே பொதுமக்கள் அச்சப்படும் நிலையில், நூதனமான முறையில் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இது புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் […]