மணிரத்னம்: `அன்று சொன்னதை, இன்று செய்தார்!' – விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

மணிரத்னம் இயக்கியிருந்த ‘தக் லைஃப்’ திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்பட்டு வந்தது.

மணி ரத்னம்
மணி ரத்னம்

சில நாட்களுக்கு முன்பு, ‘காட்டன்’ வெப் சீரிஸுக்கான புரோமோஷன் நேர்காணல் ஒன்றில் மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. இன்று இத்திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

லைகா நிறுவனமும், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது. விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கக் கமிட்டாகி இருக்கிறார். ‘அமரன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மணிரத்னம், “நான் சாய் பல்லவியின் ரசிகன். அவருடன் இணைந்து பணிபுரிவேன் என நம்புகிறேன்.” எனக் கூறியதை சாய் பல்லவி ஆச்சரியப்பட்டு கேட்டுக் கொண்டிருந்தார். இன்று அது நடந்திருக்கிறது.

விஜய் சேதுபதி இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு இப்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் அவர் முதன்மை கதாநாயகனாக நடிக்கிறார். மெகா ஹிட் இசைக் கூட்டணியை இத்திரைப்படத்திலும் தொடர்கிறார் மணிரத்னம். இப்படத்திற்கும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.