ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R பைக்கில் டூயல் சேனல் ஏபிஎஸ், க்ரூஸ் கண்ட்ரோல் அறிமுகமானது | Automobile Tamilan

கிளாமர் எக்ஸ் மாடலை தொடர்ந்து இரண்டாவது 125cc மாடலில் ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கில் க்ரூஸ் கண்ட்ரோல் பெற்றிருப்பதுடன் முதன்முறையாக இந்த பிரிவில் டூயல் சேனல் ஏபிஎஸ் கொண்ட மாடல் என்ற பெருமையை பெற்றுள்ளது. முதலில் இந்தியாவின் 125cc பைக் பிரிவில் ஏபிஎஸ் கொண்டு வந்த ஹீரோ தற்பொழுது மற்றொரு மிக முக்கியமான பாதுகாப்பு சார்ந்த மேம்பாடாக டூயல் சேனல் ஏபிஎஸ் கொடுத்திருக்கின்றது, கூடுதலாக உள்ள ரைட் பை வயருடன் க்ரூஸ் கண்ட்ரோல் கொடுத்திருப்பதுடன் நீண்ட … Read more

புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 டக்கார் எடிசன் விற்பனைக்கு எப்பொழுது.? | Automobile Tamilan

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் முழுமையான அட்ஜெஸ்டபிள் சார்ந்த சஸ்பென்ஷனை பெற்ற டக்கார் எடிசனை 2025 EICMA அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. Hero Xpulse 210 Dakar Edition ஹீரோ மோட்டோஸ்போர்ட்ஸ் டக்கார் ரேலியில் பெற்ற வெற்றியை கொண்டாடும் வகையில் எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் அடிப்படையில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யும் வகையிலான டெலிஸ்கோபிக்  முன்புறத்தில் மற்றும் பின்புறத்தில் 280 மிமீ பயணிக்கின்ற சஸ்பென்ஷனை … Read more

EICMA 2025ல் டிவிஎஸ் Tangent RR மற்றும் RTR ஹைப்பர்ஸ்டன்ட் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் ICE பிரிவில் டென்ஜென்ட் RR என்ற புதிய கான்செப்டினை ஃபேரிங் ஸ்டைலுடன் வடிவமைத்துள்ள நிலையில், RTR ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் ஆனது நேக்டூ ஸ்டைலில் தினசரி ஸ்டன்ட் சாகசங்களை மேற்கொள்பவர்களுக்கு ஏற்றதாக உள்ளது. இதுதவிர EICMAவில் தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் கான்செப்ட் மற்றும் எக்ஸ் மின் ஸ்கூட்டர் உள்ளிட்ட M1-S மற்றும் சமீபத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. TVS Tangent RR டேன்ஜென்ட் ஆர்ஆர் வடிவமைப்பில் … Read more

எலக்ட்ரிக் பிரிவில் டிவிஎஸ் e.FX.30, M1-S மற்றும் X அறிமுகம் | Automobile Tamilan

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் மாடலாக வரவுள்ள e.FX.30 கான்செப்ட், மேக்ஸி ஸ்டைல் M1-S , மற்றும் முந்தைய எக்ஸ் மாடலில் மேம்பாடுகளை வழங்கியுள்ளது. இதுதவிர இந்நிறுவனம் டேன்ஜென்ட் ஆர்ஆர், ஆர்டிஆர் ஹைப்பர் ஸ்டன்ட் கான்செப்ட் போன்றவற்றை காட்சிப்படுத்தியுள்ளது. TVS e.FX.30 இந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் கான்செப்ட் ஆக அமைந்துள்ள புதிய e.FX.30 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இது அடுத்த தலைமுறை மின்சார பவர்டிரெயினை பெற்றுள்ளது என்பதே முக்கிய … Read more

இந்தியா வரவுள்ள நார்டன் அட்லஸ் அட்வென்ச்சர் அறிமுகமானது | Automobile Tamilan

EICMA 2025ல் டிவிஎஸ் நார்டன் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் 585cc பேரலல் ட்வீன் சிலிண்டர் என்ஜின் பெற்ற அட்லஸ் மற்றும் அட்லஸ் GT அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் மத்தியில் கிடைக்க உள்ளது. 2020 ஆம் ஆண்டு டிவிஎஸ் இந்நிறுவனத்தை கையகப்படுத்திய பிறகு தற்பொழுது மிகப்பெரிய அளவில் மாற்றங்களை சந்தித்துள்ள நார்டன் புதிய மானெக்ஸ் மற்றும் மானெக்ஸ் ஆர் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. Norton Atlas and Atlas GT 585cc லிக்யூடு கூல்டு பெறுகின்ற … Read more

எதிர்காலத்திற்கான ஹீரோ விடா Novus சீரிஸ் கான்செப்ட் அறிமுகம் | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டின் கீழ் தனிநபர் மொபிலிட்டி சார்ந்த தேவைகளின் எதிர்கால மாடலாக நோவஸ் சீரிஸ் NEX 1, NEX 2, NEX 3 என மூன்று கான்செப்ட்களை EICMA 2025 கண்காட்சில் காட்சிப்படுத்தியுள்ளது. Hero Vida Novus series “VIDA Novus” எனும் புதிய மின்சார வாகன வரிசையை அறிமுகப்படுத்தியுள்ள ஹீரோ மோட்டோகார்ப் இதனை “Life is Movement” என்ற தத்துவத்தை மையமாகக் கொண்டு, மனிதர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்ற … Read more

குழந்தைகளுக்கான ஹீரோ விடா Dirt.e K3 ஆஃப்-ரோடு பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது | Automobile Tamilan

அட்வென்ச்சர் சாகசங்களை 4 வயது முதலே கற்று கொள்ளும் வகையில் ஹீரோ உருவாக்கியுள்ள விடா Dirt.E K3 எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆனது குழந்தையை போல வளரும் வகையில் வடிவமைக்கப்பட்டு 4-10 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு ஏற்றதாக EICMA 2025ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விடா இணையதளத்தில் இந்தியா மற்றும் ஐரோப்பாவில் ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து முதற்கட்ட பதிவு துவங்கப்பட்டிருந்தாலும், விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. பர்பிள், வெள்ளை மற்றும் சிவப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கின்றது. Hero Vida Dirt.E … Read more

ஹிமாலயன் மானா பிளாக் எடிசனை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு | Automobile Tamilan

ராயல் என்ஃபீல்டின் பிரசத்தி பெற்ற அட்வென்ச்சர் ரக மாடலான ஹிமாலயன் 450 அடிப்படையில், சிறப்பு மானா பிளாக் எடிசனை EICMA 2025ல் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் விற்பனைக்கு 2026 ஆம் ஆண்டின் துவக்கத்தில் கிடைக்க உள்ளது. உலகின் மிகக் கடினமான மற்றும் உயரமான சாலைகளில் ஒன்றான Mana Pass (18,478 அடி உயரம்) மீது ஈரக்கப்பட்டு அதன் அடிப்படையிலான பிரத்தியேக எடிசனில் பல்வேறு நிறுவனம் சார்ந்த ஆக்செரீஸ் மற்றும் வசதிகளை பெற்றுள்ளது. RE Himalayan Mana Black … Read more

தன்டர்போல்டு அட்வென்ச்சரை வெளியிட்ட பிஎஸ்ஏ மோட்டார்சைக்கிள்ஸ் | Automobile Tamilan

மஹிந்திராவின் கிளாசிக் லெஜென்ட்ஸ் கீழ் செயல்படுகின்ற பிஎஸ்ஏ நிறுவனத்தின் புதிய தண்டர்போல்ட் அட்வென்ச்சர் மாடல் EICMA 2025ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடல் இந்தியாவில் வெளியிடப்பட வாய்ப்புகள் இல்லை., இதன் யெஸ்டி அட்வென்ச்சர் ஏற்கனவே விற்பனையில் உள்ளது. BSA Thunderbolt பான்டம் என்ற மாடலில் ஏற்கனவே பிஎஸ்ஏ 334சிசி என்ஜினை கொண்டு வந்திருந்த நிலையில் தற்பொழுது தண்டர்போல்டிலும் 334சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் எஞ்சின்  29.20bhp மற்றும் 29.6Nm டார்க்கை உருவாக்குகிறது. இது ஆறு வேக கியர்பாக்ஸுடன், … Read more

125வது ஆண்டு கொண்டாட்ட ராயல் என்ஃபீல்டின் கிளாசிக் 650 சிறப்பு எடிசன் அறிமுகம் | Automobile Tamilan

1901 முதல் 2025 வரை 125 ஆண்டுகளை கொண்டாடும் ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம், சிறப்பு கிளாசிக் 650 மாடலின் அடிப்படையில் 125 ஆண்டுகால பதிப்பை EICMA 2025 அரங்கில் அறிமுகம் செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டின் 125 ஆண்டுகால பெருமைமிகு வரலாற்று பாரம்பரியத்தையும், கிளாசிக் மாடலின் தனித்துவமான அழகையும் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எத்தனை யூனிட்டுகள் கிடைக்கும், மேலும் விலை மற்றும் எப்பொழுது விற்பனைக்கு போன்ற தகவல் தற்பொழுது வெளியாகவில்லை. Royal Enfield Classic … Read more