தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்

சென்னை: தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மிக வலிமையாக இருக்கிறது என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் தென்சென்னை உள்ளிட்ட 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குமரி, கோவை, நீலகிரி, நெல்லை, வேலூர், ஈரோடு, சிவகங்கை, ராமநாதபுரம் தொகுதிகளில் அதிக கவனம் தேவை என்று எல்.முருகன் கூறியுள்ளார்

அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்கிறார் ராகுல் காந்தி.!

டெல்லி: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து நாளை ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய உள்ளார். குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். அவதூறு வழக்கில் கோர்ட் சிறை தண்டனை வழங்கியதை அடுத்து ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து தகுதி செய்யப்பட்டார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை … Read more

மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் பணியிடை நீக்கம்

மதுரை: மதுரையில் கைதிக்கு செல்போன் கொடுத்த விவகாரத்தில் புதூர் காவல் நிலைய தலைமை காவலர் சுரேஷ், காவலர் அய்யனார் பணியிடைநீக்கம் செய்துள்ளனர். சிறையிலிருந்து நீதிமன்ற விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர், போலீஸ் முன்பு செல்போனில் பேசிய வீடியோ வெளியானது. சமூக வலைதளங்களில் வேகமாக வீடியோ பரவிய நிலையில் தலைமை காவலர், காவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்

தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

28 வருட இடைவெளிக்குப் பிறகு 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வென்ற நாள் இன்று..!

மும்பை: கடந்த 2011-ல் இதே நாளில் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நாள் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் மிக முக்கிய நாளாகும். இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இரண்டாவது முறையாக இந்தியா ஒருநாள் உலகக் கோப்பை சாம்பியன் ஆனது. ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகரும் மறக்க முடியாத நாளாகவும் அமைந்தது. 12 ஆண்டுகள் கடந்த நிலையில் அதை கொஞ்சம் நினைவு செய்வோம். உலகக்கோப்பை இறுதிப் போட்டி … Read more

பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தது: குடிநீர் தேவைக்கு மட்டும் 200 கன அடி நீர் திறப்பு

நெல்லை: பாபநாசம் அணை வறண்டதால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. குடிநீர் தேவையை சமாளிக்க இரு அணைகளில் இருந்தும் தலா 100 கன அடி வீதம் 200 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி  மாவட்டங்கள் விவசாயம் சார்ந்த மாவட்டங்களாகும். பாபநாசம் அணை தான் இந்த 3 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தென்மேற்கு பருவமழையும்,  அக்டோபர், நவம்பர், டிசம்பர் … Read more

தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை வெட்டிக் கொன்றான் அண்ணன்

தூத்துகுடி: தூத்துகுடியில் ஆன்லைன் ரம்மியில் விளையாடி பணத்தை இழந்த தம்பியை அண்ணன் வெட்டிக் கொன்றான். தன்னிடம் இருந்த பல லட்ச ரூபாய் பணத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததுடன் அண்ணன் முத்துராஜிடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று அதையும் இழந்துள்ளார். ஆன்லைன் ரம்மியால் நடந்த கொலை தூத்துக்குடி பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் வன்முறை.! ஒருவர் உயிரிழப்பு, தொடர்ச்சியாக 80 பேர் கைது: கூடுதல் துணை ராணுவப் படைகளை அனுப்புகிறது ஒன்றிய அரசு

பாட்னா: நாடு முழுவதும் ராமநவமி கொண்டாட்டங்கள் கடந்த 30-ந்தேதி நடந்தன. இதன் ஒரு பகுதியாக பீகாரிலும் பல்வேறு நகரங்களில் சாமி சிலைகள் ஊர்வலம், சிலை கரைப்பு உள்ளிட்டவை நடந்தன. இதனை முன்னிட்டு, நாலந்தா மற்றும் சசராம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், வன்முறை பரவியது. 8 பேர் காயமடைந்தனர். 3 பேருக்கு துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டன. இதனை தொடர்ந்து நாலந்தா மாவட்டத்தின் பீஹார்ஷெரீப் மற்றும் ரோத்தாஸ் மாவட்டத்தின் சசராம் நகர … Read more

ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர் கண்காட்சி

கூடலூர்: ஆயிரக்கணக்கான வண்ண மலர்களுடன் தேக்கடியில் 15வது மலர்கண்காட்சி நேற்று மாலை முதல் தொடங்கியது. கேரள மாநிலம், தேக்கடி வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மன்னாரத்தரை கார்டன், குமுளி வியாபாரிகள் சங்கம் இணைந்து நடத்தும் தேக்கடி 15வது மலர்கண்காட்சி தேக்கடி – குமுளி ரோடு, கல்லறைக்கல் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. மே 14ம் தேதி வரை நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் ஆயிரக்கணக்கான மலர்கள், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச்செடிகள், அலங்காரச்செடிகள், தோட்டச்செடிகள், சமையலறை … Read more

அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றமைக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். என் உழைப்புக்கும் நேர்மைக்கும் கிடைத்த அங்கீகாரமே பொதுச்செயலாளர் பதவி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.