ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே, கேரளாவில் இருந்து தஞ்சாவூருக்கு வந்த சுற்றுலா பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 2 பேர் உயிரிழந்துள்ளார், 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குமாரசாமி கட்சி எம்எல்ஏ பா.ஜவில் இணைந்தார்

பெங்களூரு: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த குமாரசாமி கட்சியை சேர்ந்த ஏ.டி. ராமசாமி பாஜவில் இணைந்தார். கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரகலகூடு மஜத எம்எல்ஏ ஏடி ராமசாமி நேற்று முன்தினம் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து டெல்லி சென்ற ஏடி ராமசாமி பாஜ கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமையில் அக்கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஏடி ராமசாமிக்கு கட்சியின் கொடியை அணிவித்து வரவேற்றார். அதன் பிறகு ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூரையும் … Read more

விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

விருதுநகர்: விருதுநகர் அருகே கோவை நோக்கி சென்றுகொண்டிருந்த ஆம்னி பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் பயணிகள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில் பேருந்து தீக்கிரை ஏற்பட்டது.

செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி வெட்டிக் கொலை!

திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் அருகே முறுக்கு வியாபாரி அப்துல் லத்தீப் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.  அதிகாலை வீட்டில் தூங்கிகொண்டிருந்த அப்துல் லத்தீப்பை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொன்றுள்ளனர். தந்தை அப்துல் லத்தீப் கொலை செய்யப்படுவதை தடுக்க சென்ற மகன் தவ்பிக்குக்கு அரிவாளால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த தவ்பிக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 மாத தண்டனைக்குப்பின் சிறையிலிருந்து சித்து விடுதலை; உற்சாக வரவேற்பு

பாட்டியாலா: கொலை வழக்கில் ஓராண்டு தண்டனை பெற்ற காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து 10 மாத தண்டனைக்குப் பின் பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலையானார். பஞ்சாப்பை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் சித்து, கடந்த 1988ம் ஆண்டு பாட்டியாலாவில் காரில் சென்ற போது ஏற்பட்ட தகராறில் குர்னம் சிங் என்பவரை தாக்கியதில் அவர் இறந்தார். இந்த கொலை வழக்கில் சித்துவுக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் பாட்டியாலா சிறையில் … Read more

தீண்டாமை வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை ஜாமீனுக்கு முன் பரிசீலிக்க வேண்டும்: 2 ஆண்டுக்கு முன் வழங்கிய ஜாமீன் ரத்து

மதுரை: தீண்டாமை வன்கொடுமை வழக்கில் ஜாமீன் வழங்கும் முன் பாதிக்கப்பட்டோரின் ஆட்சேபத்தை பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே சாம்பிராணிபட்டியில் உள்ள நிலத்தின் மீதான உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்னை இருந்துள்ளது. கடந்த 24.2.2020ல் அந்த நிலத்தை அளவீடு செய்து வேலி அமைக்கும் பணியில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது எஸ்சி – எஸ்டி … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,831,892 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.31 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,831,892 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,991,820 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,926,949 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,914 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் எனது நற்பெயரை கெடுக்க சதி: போபால்-டெல்லி வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார்

போபால்: ‘எனது நற்பெயரை சீர்குலைக்க விரும்பும் சிலர், அதற்காக இந்தியாவிலும், வெளிநாட்டிலும் உள்ளவர்களுக்கு பணம் கொடுத்து இணைந்து செயல்படுகின்றனர்’ என காங்கிரசை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கி உள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு மற்றும் ராகுலின் தகுதிநீக்கம் தொடர்பாக ஜெர்மனி அரசு காங்கிரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது போன்ற விவகாரங்களால் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி … Read more

டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் கப்பலூரில் ஆர்ப்பாட்டம்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் நேற்று முதல் 10 சதவீத சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு வாகன ஓட்டுநர்கள், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். டோல்கேட் கட்டண உயர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கம் சார்பில்  நேற்று கப்பலூர் டோல்கேட் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைத்தலைவர் சாத்தையா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு ,சுங்கக்கட்டண உயர்வினை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும் என கோஷங்கள் … Read more

ஏப்-02: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 316-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.