காங்கிரஸ் பிரமுகர் நவ்ஜோத்சிங் சித்து பாட்டியாலா சிறையில் இருந்து விடுதலை

பஞ்சாப்: காங். பிரமுகரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஒருவரை தாக்கிய வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

காரைக்காலில் ரெய்டு உதவி பதிவாளர் கைது: பலகோடி ரூபாய் ஆவணங்கள் பறிமுதல்

காரைக்கால்: புதுவை மாநிலம் காரைக்கால் நேரு வீதியில் சார் உதவி பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு  திருப்பட்டினம் நிரவி பகுதியை சேர்ந்த ஒருவர் அங்கீகாரம் இல்லாத வீட்டு மனையை பதிவு செய்ய உதவிப் பதிவாளர் சந்திரமோகன் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சிபிஐக்கு புகார் சென்றது. இதைத்தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் கடந்த ஒரு வாரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நேரு வீதியில் இருக்கும் உதவிப் பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்தனர். பின்னர் பணியிலிருந்த … Read more

வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காயல் கரையோரத்தில் உள்ள மைதானத்தில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தொடங்கப்பட்டது. விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளனர். வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகிறது. மார்ச் 6-ல் நாகர்கோவிலில் நடந்த தோள்சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு விழாவில் பினராயியை சந்தித்து … Read more

வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

திருவனந்தபுரம்: வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளர். வைக்கம் போராட்ட வரலாற்றை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பேசினார். வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறேன். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம் என்று தெரிவித்தார்.

உதகையில் குதிரை பந்தயத்துடன் தொடங்கியது கோடை விழா: இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த குதிரைகள்

உதகை: உதகையில் பிரசித்திபெற்ற குதிரை பந்தயத்துடன் கோடை சீசன் தொடங்கி இருக்கிறது. போட்டியில் பங்கேற்ற குதிரைகள் இலக்கைநோக்கி சீறிப்பாய்ந்து ஓடுவதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டுகளிக்கின்றனர். மலைகளின் அரசியான உதகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் மாதங்களாகும். அப்போது சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள் வருவதால் கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக கோடை சீசனின் தொடக்கமாக பிரசித்தி பெற்ற குதிரை பந்தயம் நடத்தப்படும் அந்த வகையில் 136 … Read more

செய்யாறு அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது..!!

தி.மலை: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே கூழமந்தல் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் முருகனை போக்சோ சட்டத்தில் போலீஸ் கைது செய்தது.

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!

போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். ராணிகமலாபதி ரயில் நிலையத்தில் நடந்த விழாவில் நாட்டின் 11வது வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கிறார். போபால் ராணி கமலாபதி – டெல்லி ஹர்சத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.

நார்த்தாமலை ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு; 26 பேர் காயம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. 550 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டில் 26 பேர் காயமடைந்தனர்.

லைகா தயாரிப்பில் இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக அறிவிப்பு..!!

சென்னை: லைகா தயாரிப்பில் இயக்குநர் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்குமார் நடிக்கும் படத்துக்கு அனிருத் இசை அமைப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் திவ்ய தரிசன அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நடைமுறை இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு மலையேறி நடந்து வரும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்க திவ்ய தரிசன முறை இருந்தது. மலையேறி நடந்து வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முன்னுரிமை ஏற்பாடாக சிறப்பு அனுமதி தரப்பட்டது.