அரசின் தடையை சமாளிக்க புதிய யுக்தி: மீண்டும் வருகிறது 'டிக்டாக்'

டெல்லி : இந்தியாவிற்குள் மீண்டும் ‘டிக்டாக்’ செயலி நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ‘டிக்டாக்’ மூலம் ஓவர் நைட்டில் பிரபலமானவர்கள் ஏராளம். ஒரு காலத்தில் சராசரி நபர்களையும் சினிமா ஸ்டார் களைப்போல வளம் வர செய்த பெறுமை இந்த ‘டிக்டாக்’ சேரும். இன்று சின்ன துறை தொடங்கி சினிமா வரையில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி ஜொலித்துவரும் டிக்டாக் பிரபலங்கள் ஏராளம். இதனால் தன் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலியை ஒன்றிய … Read more

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக மேலும் இரண்டு வழக்கறிஞர்கள் நியமனம்

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மேலும் இரண்டு வழக்கறிஞர்களை குடியரசு தலைவர் நியமித்துள்ளார். சுந்தர் மோகன் மற்றும் குமார் கமலேஷ் பாபு ஆகியோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

‘லுக் அவுட்’ நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு செல்ல அனுமதி; சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

மும்பை: லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தி வெளிநாடு சென்று வருவதற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தைத் தொடர்ந்து, அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் வழக்கு தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. முன்னதாக அவர் தேடப்படும் குற்றவாளியாக விசாரணை அமைப்புகளால் அறிவிக்கப்பட்டதால், அவருக்கு எதிராக லுக்அவுட் … Read more

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதற்காக கடந்த 11 நாட்களில் ரூ.22 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பைக் ஊரறிய 21,984 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஒட்டியதற்காக கடந்த 11 நாட்களில் ரூ.22 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டும்; மாநில அரசுகளுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் கடிதம்

டெல்லி: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்தது. தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

ஸ்லோவாக் குடியரசின் பிரதமருடன் ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

ப்ரேடிஸ்லாவ: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஸ்லோவாக் குடியரசின் பிரதமர் எட்வார்ட் ஹெகரை சந்தித்துப் பேசினார். அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் உக்ரைன் மோதல் மற்றும் அதன் பெரிய விளைவுகள் பற்றிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால் 6 மடங்கு அபராதம்; ரயில்வே நிர்வாகம் அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: ரயில் பயணிகள் ரயிலில் கூடுதல் லக்கேஜ் எடுத்து சென்றால், 6 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே விதிகளின்படி, ரயில்களில் பயணிக்கும் பயணிகள் தாங்கள் பயணிக்கும் ரயில் பெட்டியில் 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம். கூடுதல் பொருட்களை எடுத்து சென்றால் சம்பந்தப்பட்ட பயணிகள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே இருந்த அபாராத தொகையை காட்டிலும் ஆறு மடங்கு அதிகமாக செலுத்த … Read more

பாஜக-வின் வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை.: எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜக-வின் வி.பி.துரைசாமி அதிமுகவிற்கு சான்றளிக்க வேண்டிய அவசியமில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.  மேலும் மாநிலங்களவை தேர்தலில் ஆதரவு அளித்த பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய தொழிலாளர் நல சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிட்டது ஒன்றிய அரசு..!!

டெல்லி: புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளின் மாநில வரைவு விதிகளை தமிழில் வெளியிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கான மாநில வரைவு விதிகள் மீதான ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபணைகளை அளிக்க ஏதுவாக, கடந்த 11.04.2022 அன்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட மாநில வரைவு விதிகளை தமிழில் வழங்குவது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றிய அரசு தற்போது நடைமுறையிலுள்ள 29 ஒன்றிய தொழிலாளர் நலச் சட்டங்களை உள்ளடக்கி,(1)    ஊதியச் சட்டத் தொகுப்பு, 2019(2)    தொழில் … Read more

ஷில்லாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டுள்ள இந்தோ-டேனிஷ் திட்டத்தை ஆய்வு செய்தார் எல்.முருகன்

சில்லாங்: ஷில்லாங்கில் வெற்றிகரமாக செயல்படுத்தபட்டுள்ள இந்தோ-டேனிஷ் திட்டத்தை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் பார்வையிட்டார். அங்கு கால்நடைகளின் மேம்படுத்தப்பட்ட பணிகள், தீவனம், கால்நடை வளர்ப்பு  திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.