குஜராத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையில் தொடங்கியது கல்வி அமைச்சர்கள் மாநாடு

காந்திநகர்: குஜராத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான கல்வி அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. மாநில கல்வி அமைச்சர்கள், கல்வித் துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, காங். வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு..!!

சென்னை: தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை பதவிக்கு போட்டியிடும் திமுக, அதிமுக, காங். வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது. திமுக – 3, அதிமுக – 2, காங்கிரஸ் -1 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த 7 சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடக காங்கிரசின் மூத்த தலைவர் பிரிஜேஷ் கலப்பா அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். காங்கிரஸ் கட்சியில் ஆர்வமின்மையை சுட்டிக்காட்டி விலகுவதாக அவர் தெரிவித்தார்.

சென்னையில் மீன் வியாபாரியை இரும்பு கம்பியால் தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மீன் வியாபாரி முகமது ஆரிப்பை தாக்கி ரூ.3 லட்சம் கொள்ளை என புகார் அளிக்கப்பட்டது. பைக்கில் வந்த மர்ம நபர்கள் இரும்பு கம்பியால் தாக்கி கொள்ளையடித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000-ஐ கடந்தது: சுகாதாரத்துறை அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் 2 மாதங்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 1000ஐ கடந்ததால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்தது. செவ்வாய்கிழமை ஒரே நாளில் கேரளாவில் 1,197 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கேரளாவில் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்!: எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் கடிதம்..!!

சென்னை: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் கவனம் தேவை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சில வாரங்களுக்கு நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மிகவும் அவசியம் மற்றும் முக்கியம் எனவும் மருத்துவத்துறை செயலர் தெரிவித்திருக்கிறார்.

பின்னணி பாடகர் கே.கே. மரணம் இயற்கைக்கு மாறானது: கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு

கொல்கத்தா: பின்னணி பாடகர் கே.கே. மரணம் இயற்கைக்கு மாறானது என கொல்கத்தா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மரணடைப்பால் உயிரிழந்த கேகே உடல் இன்று பிற்பகல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

விழுப்புரம் அருகே சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து ஒருவர் பலி

விழுப்புரம்: கிழக்கு புதுச்சேரி சாலையில் ரயில்வே மேம்பாலம் அருகே சேதமடைந்த மின்கம்பம் சாய்ந்து கணேசமூர்த்தி என்பவர் பலியானார். மின்கம்பம் சாய்ந்ததில் படுகாயம் அடைந்த ஒருவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியாவில் ஒரே நாளில் 2,745 பேருக்கு கொரோனா..2,236 பேர் குணமடைந்தனர்..6 பேர் பலி!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 2,745 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,60,832 ஆக உயர்ந்தது.* புதிதாக 6 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை!!

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3 பேர் அகதிகளாக வருகை புரிந்துள்ளனர். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அதிகாலையில் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரையில் வந்து இறங்கிய இவர்களை மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையில் இருந்து இதுவரை 83 தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ளனர்.