நாடு முழுவதும் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாக 'center for research on energy and clean air' ஆய்வில் தகவல்

டெல்லி: கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நாடு முழுவதும் பல நாட்கள் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. வழக்கம் போல் பொதுமக்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு குறைவாக உள்ளதாகவும், அதனால் வரும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்தாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘center for research on energy and clean … Read more

தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 901 லெவல் கிராசிங்குள் மூடப்பட்டுள்ளன: தெற்கு ரயில்வே

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 901 லெவல் கிராசிங்குள் மூடப்பட்டுள்ளன என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 639 ஆளில்லாத லெவல் கிராசிங்குளும், 262 கேட்கீப்பர் உள்ள லெவல் கிராசிங்குளும் மூடப்பட்டுள்ளன. 92 லெவல் கிராசிங்குள் ரயில்வே மேம்பாலமாகவும், இதர லெவல் கிராசிங்குள் சுரங்கப்பாதைகளாகவும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம்; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சு

கொல்கத்தா: 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றிபெற விடமாட்டோம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் புருலியா நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், மகாராஷ்ட்ர முன்னாள் அமைச்சர் நவாப் மாலிக் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கும், பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்படுவதற்கும் கண்டனம் தெரிவித்தார். ஒத்திய அரசின் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சித் தலைவர்களை … Read more

கல்விச் சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல: ஐகோர்ட்

சென்னை: கல்விச் சான்றிதழ்கள் சந்தைப் பொருளல்ல; இந்திய ஒப்பந்தச் சட்டப்படி, சான்றிதழ்களை கல்வி நிறுவனங்கள் தங்கள் வசம் வைத்துக் கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மருத்துவ மேற்படிப்பு மாணவர்களிடம் பெற்ற சான்றிதழ்களை திரும்ப வழங்கக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆம்புலன்ஸ் மீது லாரி மோதி 7 பேர் பலி: உ.பி-யில் சோகம்

லக்னோ: டெல்லியில் இருந்து ஆம்புலன்ஸ் ஒன்று இன்று காலை உத்தரபிரதேசம் நோக்கி சென்றுகொண்டிருந்தது. உத்தரபிரதேசத்தின் ஃபடிகஞ்ச் பாஷிம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் தடுப்புகள் மீது மோதி சாலையின் மறுபக்கத்திற்கு சென்றது. அப்போது, அந்த சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி … Read more

செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை செய்து வருகிறது. கோடை வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

டெல்லி: டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினை ஜூன் 9 வரை அமலாக்க துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் நேற்று அமைச்சர் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு

சென்னை: தமிழ்நாட்டில் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் எஸ்.பி.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. கே.பிச்சை, கே.எஸ்.ரவிச்சந்திரன், டி.லோகநாதன், பி.வீரமணி, எஸ்.ஈஸ்வரமூர்த்தி, வி.செங்கமலகண்ணன் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. எஸ்.லயோலோ இக்னடியஸ், டி.ராஜகுமார், ஆர்.ராஜசேகரன், ஜி.ஆர்.ஆராஷூ, எஸ்.கிருஷ்ணன் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆர்.முத்துசாமி, கே.பீர் மொஹிதீன், ஜி.சார்லஸ் கலைமணி, எஸ்.மோகன் தமிபிராஜன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம்

டெல்லி: விமானப்படை, கடற்படைக்கு ரூ.2,971 கோடியில் அஸ்திரா ஏவுகணைகள் வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது. பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து அஸ்திரா ஏவுகணைகளை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் செய்துள்ளது.

ஹாக்கி அணிகள் தரவரிசை பட்டியலில் 6 வது இடத்தில் இந்திய ஹாக்கி மகளிர் அணி

மும்பை: இந்திய ஹாக்கி மகளிர் அணி சர்வதேச ஹாக்கி அணிகள் தரவரிசை பட்டியலில் 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வரலாற்றிலேயே முதல்முறையாக 6 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.